திமுகவின் பண பலத்தை பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினரின் கள்ளக்கூட்டணி அம்பலமாகியுள்ளது என அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'திமுக-அதிமுகவின் கள்ளக் கூட்டணி' தற்போது ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரையை தடுக்க முயன்ற அதிமுக-திமுக கூட்டு சதிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (செப்டம்பர் 26) மாலை, தாராபுரம் ஒன்றியம் பொட்டிக்காம்பாளையம், பொட்டிநாயக்கனூர் பகுதியில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் திருமதி சத்தியபாமா பொன்னுசாமி அவர்களுடன், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு N. ஆனந்த் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் முன்னிலையில் வாக்கு சேகரிக்க சென்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அப்பகுதி மக்கள் ஆரத்தி தட்டு மற்றும் பூமாலைகளுடன் தங்களை வரவேற்க தயாராக இருந்த நிலையில், அதிமுக கட்சி துண்டு அணிந்த சுமார் பத்து நபர்கள் இடையூறு செய்து, வாக்கு சேகரிக்கக் கூடாது என கோஷமிட்டனர். மேலும், வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, கழக நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டதாக அவர் விவரித்துள்ளார்.
பொதுமக்களின் புகாரின் பேரில், காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். காவல்துறை விசாரணையில், இதற்குப் பின்னால் திமுகவின் சில பக்கத்து மாவட்டத் தலைவர்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இது 'திமுக-அதிமுகவின் கள்ளக்கூட்டணி'யை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அருண்ராஜ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஜனநாயக உரிமை என்றும், தேர்தல் களத்தில் கருத்துகளால் மோதாமல், தோல்வி பயத்தால் குண்டர் படையை ஏவி மக்களை அச்சுறுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் கழகத் தலைவர், தொண்டர்கள், மற்றும் தமிழக மக்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்றும், அச்சுறுத்தலால் ஜனநாயகக் குரலை ஒடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஜனநாயக விரோத-வன்முறை 'அதிமுக-திமுக' கும்பலுக்கு தாராபுரம் மக்கள், தங்கள் வாக்கின் மூலம் உரிய பதிலை வழங்குவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை என அருண்ராஜ் தனது பதிவை முடித்துள்ளார்.
