MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!

அரசியல்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!

Admin
Last updated: மே 18, 2026 3:01 மணி
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தலுக்குப் பிறகு கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும், லட்சக்கணக்கான தொண்டர்களும் இதே மனநிலையில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா காத்த இந்த இயக்கம் இப்படி பலவீனமடைந்து விட்டதை எண்ணி வேதனைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா" என்ற வரிகள் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் செம்மலை. உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுவதாக ஆங்கில நாளிதழ்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கும், அரசியல் அங்கீகாரத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், தடுக்கப்பட்டதாகவும், ஆனாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு பணியாற்றி வந்ததாகவும் செம்மலை தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை எண்ணிப் பார்க்கும்போது, தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியில் தொடர்ந்து பயணிக்க மனம் இடம் தரவில்லை என்றும், இதனால் கனத்த இதயத்துடன் தனது பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்குப் பிறகு கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மன வேதனையை அளிப்பதாகவும், அவை திருப்தி அளிக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தலைவர்களிடம் இருக்க வேண்டும் என்றும், நிர்வாகிகளுக்கு இடையே உள்ள 'ஈகோ' தான் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவை திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும், இதற்கு கட்சியை வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தலின் போது கடுமையாக உழைத்ததாகவும், உட்கட்சி பூசல் காரணமாகவே வெற்றி பெற முடியவில்லை என்றும் கூறிய அவர், எஸ்.பி.வேலுமணியின் பின்னால் பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்செம்மலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யுஏஇ அணுமின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் – இந்தியா கண்டனம்!
Next Article தோனி 2027ல் ஓய்வு? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

சினிமா

விஜய்க்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து! மக்கள் எதிர்பார்ப்பு!

நாகர்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சவுந்தர்யா ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மக்கள் அவரை நம்பியுள்ளனர் என தெரிவித்தார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு: அமலாக்கத்துறை கடிதம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறையினர் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திமுகவின் முதுகில் குத்தியதா காங்கிரஸ்? கார்த்தி சிதம்பரம் விளக்கம்!

திமுகவுடன் கூட்டணி அமைத்தும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுகவின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
அரசியல்

கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை – முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் நிகழ்வு இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்குதான் நிகழ்வு தொடங்கியது என்றாலும் அதிகாலை முதலே…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?