MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விசாகப்பட்டினத்தில் 65 அடி திரிசூலம்: கைலாசகிரிக்கு புதிய பொலிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - விசாகப்பட்டினத்தில் 65 அடி திரிசூலம்: கைலாசகிரிக்கு புதிய பொலிவு

இந்தியா

விசாகப்பட்டினத்தில் 65 அடி திரிசூலம்: கைலாசகிரிக்கு புதிய பொலிவு

Admin
Last updated: மே 13, 2026 1:44 மணி
Admin
Share
SHARE

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 65 அடி உயர திரிசூலம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. உடுக்கையுடன் கூடிய இந்த பிரம்மாண்டமான திரிசூலம், கைலாசகிரி மலைப்பகுதியின் அழகிற்கு மேலும் மெருகூட்டியுள்ளது.

விசாகப்பட்டினத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கைலாசகிரி மலை, அதன் சிவன் மற்றும் பார்வதி சிலைகளுக்குப் பெயர் பெற்றது. வார இறுதி நாட்கள், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்தச் சூழலில், இப்பகுதியை மேலும் மேம்படுத்தும் நோக்கில், விசாகப்பட்டினம் நகர வளர்ச்சி கழகம் (VMRDA) இந்த பிரம்மாண்டமான திரிசூலத்தை அமைத்துள்ளது. சுமார் 8 மாத கால கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, சமீபத்தில் இதன் திறப்பு விழா நடைபெற்றது.

சுமார் 65 அடி உயரம் கொண்ட இந்த திரிசூலத்தின் உடுக்கை 18 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்டுள்ளது. இரவில் எல்.இ.டி. விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கும் இந்த திரிசூலத்தை, நகரின் பல பகுதிகளில் இருந்தும் காண முடியும். ரோப்-வே வசதி கொண்ட இந்த மலைக்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஆந்திர கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலின் புனரமைப்புப் பணிகளின் 75 ஆண்டுகளை நாம் கொண்டாடும் இந்த வேளையில், விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம் அமைக்கப்பட்டிருப்பது ஆந்திராவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது நமது இந்திய கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் பறைசாற்றுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நாராயணா பூஜைகள் நடத்தி இந்த திரிசூலத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
Next Article 5 ஆண்டுகள் நீடிக்கும் த.வெ.க. அரசு: வன்னிஅரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

கர்நாடகாவில் சோகம்: பஸ் ஜன்னல் வழியே எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டித்து பலி

கர்நாடகாவில் பேருந்து ஜன்னல் வழியே எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோரிக்கை எழுந்துள்ளது.

1 Min Read
கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
இந்தியா

மேகதாது விவகாரம்: டி.கே. சிவக்குமார் அமைதிக்கு அசோகா கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக…

2 Min Read
இந்தியா

ஆன்லைன் ஜோதிடர் போல் நடித்து ரூ.60 லட்சம் கொள்ளை

காதல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி ஆன்லைன் ஜோதிட மோசடி கும்பல், பூஜை, சடங்குகள் செய்வதாக கூறி அப்பாவி மக்களிடம் இருந்து ரூ.60 லட்சத்திற்கும் மேல் டிஜிட்டல்…

1 Min Read
இந்தியா

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான மோனு, பல மாநிலங்களில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?