MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - 2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி

அரசியல்

2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி

Admin
Last updated: மே 24, 2026 1:26 மணி
Admin
Share
SHARE

2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக எனது அலுவலக பணிகளை நாள்தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி, விளையாட்டுத் துறை அதிகாரிகள், வீரர்கள், சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். உங்களது தேவைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம்' என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் குழுப் போட்டிகளில் மட்டுமே பதக்கங்கள் பெற்றுள்ளனர். தனிநபர் பிரிவுகளில் இதுவரை பதக்கங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையை மாற்றி, வருங்காலங்களில் தனிநபர் பிரிவுகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பதக்கங்கள் வெல்லும் வகையில் தொலைநோக்கு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, இதற்கென அரசு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸாப் குழு உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வது எவ்வளவு கடினமான முயற்சி என்பதை விளையாட்டு வீரர் என்ற முறையில் நான் அறிவேன். எனவே, விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள், ஊட்டச்சத்து மிக்க உணவு, உயர்தர பயிற்சி முகாம்கள், உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள், சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க விளையாட்டுத் துறை தயாராக உள்ளது. குறிப்பாக, வரும் ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது. இந்த உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்வதே ஆகும். அந்த வகையில் 2028-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க பொதுச் செயலாளர் சைரஸ் பூன்ச்சா, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங், பயிற்சியாளர் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனைகள் உடனிருந்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2028 OlympicsTamil Nadu Sportsஆதவ் அர்ஜுனாஒலிம்பிக்தமிழகம்விளையாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சி.பா.ஆதித்தனார் 45வது நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
Next Article பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலானது. கோடை…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

You Might Also Like

அரசியல்

300 பெண் கால்நடை மருத்துவர்கள் குடும்பம் காக்க கோரிக்கை!

300க்கும் மேற்பட்ட பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் பாதிக்கப்படாமல், பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
அரசியல்

அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடமில்லை: வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் இடம் இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அரசுக்கு ஆதரவு…

1 Min Read
அரசியல்

20 கோடி முட்டைகள் சேமிப்பு: அண்ணாமலை கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளை ஒப்பந்ததாரர்கள் 20 கோடி அளவுக்கு சேமித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது…

1 Min Read
அரசியல்

அதிமுகவில் இணைந்த வேலுமணி அணி: பழனிசாமிக்கு சபாநாயகரிடம் கடிதம்

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் இணைந்தது. இதையடுத்து, பழனிசாமியை சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்க சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?