MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 25 ஆண்டுகளுக்குப் பின் ஜிம்பாப்வேயின் வரலாற்றுச் சாதனை: வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > 25 ஆண்டுகளுக்குப் பின் ஜிம்பாப்வேயின் வரலாற்றுச் சாதனை: வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது
விளையாட்டு

25 ஆண்டுகளுக்குப் பின் ஜிம்பாப்வேயின் வரலாற்றுச் சாதனை: வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது

Admin
Last updated: July 1, 2026 9:03 am
Admin
Share
SHARE

ஹராரே: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாகத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று ஜிம்பாப்வே புதிய சாதனை படைத்துள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி, தொடக்க வீரர் இன்னோசென்ட் காயாவின் சிறப்பான ஆட்டத்தால் தனது முதல் இன்னிங்ஸில் 410 ரன்கள் குவித்தது. காயா 227 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 270 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து 270 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேசம், ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 185 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் 34 ரன்களும், சாண்டோ 30 ரன்களும் எடுத்து ஓரளவிற்குப் போராடினர். இவர்கள் இருவரும் இணைந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் பிளெசிங் முசரபானி 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ரிச்சர்ட் ங்கரவா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை எளிதாக்கினர். ஆட்டநாயகனாக இன்னோசென்ட் காயா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் 2025-இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றிருந்தது. தற்போது வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம், கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாகத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக 1998-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஜிம்பாப்வே அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சாதனைடெஸ்ட் கிரிக்கெட்வங்கதேசம்விளையாட்டுஜிம்பாப்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் ரூ.15 கோடி கொகைன் கடத்தல்: கென்ய பெண் கைது
Next Article ஜூலை 1 முதல் அமல்: முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம்…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: கே.எல். ராகுல் புதிய சாதனை! 50வது அரைசதம் பதிவு

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கே.எல். ராகுல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தனது 50வது அரைசதத்தை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் வெற்றி

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில்…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: ஆர்சிபி நிர்வாகம் பொய் சொன்னதா? யாஷ் தயாள் விளக்கம்

2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் விளையாடாதது குறித்து, அணி நிர்வாகம் தெரிவித்த காரணத்தை அவர் மறுத்துள்ளார். இது அணி நிர்வாகத்திற்கும் வீரருக்கும் இடையே…

1 Min Read
விளையாட்டு

தோனி வருவாரா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ரவி சாஸ்திரி அறிவுரை!

எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 போட்டியில் மைதானத்திற்கு வருவாரா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அஸ்வின் கருத்து.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?