இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, தனது Yamaha FZ X பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Yamaha FZ X பைக்கில் மொத்தம் இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. அவை: FZ X Standard, இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 441 ஆகவும், FZ X Dark Matte Blue Purple, இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரத்து 962 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 149 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளன. பைக்கின் மொத்த எடை 139 கிலோ ஆகும். இருக்கை உயரம் 810 மி.மீட்டர். இந்த FZ X பைக் கருப்பு, நீலம் மற்றும் அடர் நீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் குதிரைத்திறன் 12.2 பிஎச்பி மற்றும் டார்க் இழுதிறன் 13.3 என்எம் ஆகும்.
மைலேஜ் மற்றும் வேகம் குறித்துப் பார்க்கும்போது, இந்த பைக் மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக செல்லக்கூடியது. இதில் உள்ள 5 கியர்களில், ஒரு கியரை கீழேவும் மற்ற நான்கையும் மேலேவும் இயக்க வேண்டும். இது பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் எமிஷனுடன் வருகிறது. இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 47 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 10 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட டேங்கர் இதில் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால், சுமார் 470 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.
பாதுகாப்பிற்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதி இதில் உள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் இதில் உள்ளன. முன்பக்கம் மற்றும் பின்பக்கம் தலா 17 இன்ச் சக்கரங்களும், ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
சஸ்பென்ஷன் அமைப்பைப் பொறுத்தவரை, முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சனும், பின்பக்கம் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோகிராஸ் சஸ்பென்சனும் இடம்பெற்றுள்ளன. பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். 1.6 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதியும், 1330 மி.மீட்டர் வீல்பேஸ் வசதியும் உள்ளது.
இந்த Yamaha FZ X பைக்கு 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருட வாகன வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், பிரைட்னஸ் கண்ட்ரோலுடன் கூடிய எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்ஷன் வசதி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ஃப்யூயல் கேஜ், 2 ட்ரிப்மீட்டர், டிஜிட்டல் டேக்கோமீட்டர் ஆகியவை டிஜிட்டல் முறையில் உள்ளன. ஸ்டாண்ட் அலாரம், குறைந்த பெட்ரோல் எச்சரிக்கை இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹைபீம் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் மற்றும் அழைப்புகள்/எஸ்எம்எஸ் வந்தால் அலெர்ட் செய்யும் வசதி போன்ற பல சிறப்பம்சங்களும் இதில் அடங்கும்.
