MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

Admin
Last updated: June 22, 2026 10:14 am
Admin
Share
SHARE

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு அணியின் மோசமான ஃபீல்டிங் மற்றும் தவறவிடப்பட்ட கேட்சுகளே காரணம் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சக வீராங்கனைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 31 ரன்களும், தீப்தி சர்மா 29 ரன்களும் சேர்த்தனர். தனது 200வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் மரிசான் காப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்த மரிசான் காப், 25 மற்றும் 65 ரன்களில் இருந்தபோது கொடுத்த இரண்டு எளிதான கேட்ச் வாய்ப்புகளை ஃபீல்டர் ராதா யாதவ் தவறவிட்டார். மேலும், டாஸ்மின் பிரிட்ஸ் 18 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் இந்திய அணி கோட்டைவிட்டது.

தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'சில முக்கிய வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஃபீல்டர்கள் பந்துவீச்சாளர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்கவில்லை. சர்வதேச தரத்திலான போட்டிகளில் இது போன்ற வாய்ப்புகளைத் தவறவிடுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மரிசான் காப் கொடுத்த கேட்சுகளை தவறவிட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது' என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இந்திய அணி தனது அடுத்த லீக் போட்டிகளில் ஜூன் 25 அன்று வங்கதேசத்தையும், ஜூன் 28 அன்று ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய அணிகிரிக்கெட்தென்னாப்பிரிக்காமகளிர் டி20 உலகக் கோப்பைஹர்மன்பிரீத் கவுர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பவானிசாகர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானை: பீதியில் மக்கள்
Next Article முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: ஜி.கே. வாசன் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வு மாணவர்களுக்காக காத்திருந்த பிரதமர் மோடி

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக பிரதமர் மோடி விமான நிலையத்தில் சுமார் 45…

June 22, 2026

உள்ளாடைக்குள் கேள்வித்தாள்: நீட் தேர்வுக்கு வந்த மாணவர் கைது

நீட் தேர்வு எழுத வந்த மாணவர், பழைய…

June 22, 2026

கோவா இரும்புத்தாது சுரங்க மோசடி: ரூ.1000 கோடி சொத்து முடக்கம்

கோவாவில் நடைபெற்ற இரும்புத்தாது சுரங்க மோசடி தொடர்பாக,…

June 22, 2026

கடல் எல்லையை காக்கும் 3 கடற்படை கப்பல்கள்!

இந்தியாவின் கடல் எல்லையை பாதுகாக்கும் 3 முக்கிய…

June 22, 2026

கப்பலில் ‘ஐ லவ் பாகிஸ்தான்’ – தேச துரோக வழக்குப்பதிவு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், கப்பலில் 'ஐ…

June 22, 2026

You Might Also Like

விளையாட்டு

சிஎஸ்கேவுக்கு எச்சரிக்கை: ஸ்ரீகாந்த் சொல்வது என்ன? ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தல்.

1 Min Read
விளையாட்டு

15 வயது வைபவ் சூர்யவன்ஷி: இந்திய டி20 அணியில் முதல் முறை!

15 வயது வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 அணியில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: கெட்ட வார்த்தை பேசிய RCB பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

ராய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சூழலில், ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் சொன்ன…

2 Min Read
விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ஆட்டம் முன்பே இந்தியாவிற்கு 5 ரன்கள் போனஸ்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய அணி 5-0 என்ற கணக்கில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?