ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, 27 வயதான திருமணமான பெண் ஒருவர் தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் அவரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷோபா, குடிகோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஷோபாவுக்கு குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி நாயக் என்பவர் தொலைபேசி மூலம் அறிமுகமானார். இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலமாகவும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் உறவு குறித்து அறிந்த கணவர் சிரஞ்சீவி, ஷோபாவிடம் இது குறித்துக் கேட்டு அவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷோபா, தனது கள்ளக்காதலனான பாலாஜி நாயக்குடன் வீட்டை விட்டு ஓடிப்போனார். இருவரும் ஒரு சிறிய கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஷோபா வீட்டை விட்டுச் சென்ற பிறகு, அவரது கணவர் சிரஞ்சீவி காவல் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, ஷோபா மற்றும் பாலாஜி நாயக்கின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர். பின்னர், அவர்களைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையிடம் பாலாஜி நாயக் கூறுகையில், 'ஷோபா தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்தால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். அவரது அழுத்தத்தின் காரணமாகவே அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று' என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

