MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நகைக்காக கொலை நாடகம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொடூர கொலை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நகைக்காக கொலை நாடகம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொடூர கொலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நகைக்காக கொலை நாடகம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொடூர கொலை!

தமிழ்நாடு

நகைக்காக கொலை நாடகம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொடூர கொலை!

Fernandez
Last updated: செப்டம்பர் 5, 2026 11:55 காலை
Fernandez
Share
கொலை செய்யப்பட்ட பூபதி உடலை போலீசார் ஆய்வு செய்கின்றனர்
கொலை செய்யப்பட்ட பூபதி உடலை ஆய்வு செய்யும் போலீசார்
SHARE

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சின்னபட்டி பகுதியைச் சேர்ந்த பூபதி (45), சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் எஸ்.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செங்கல், சிமெண்டு கற்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் அதிபரான இவருக்கு சுஜிதாஸ்ரீ (31) என்ற மனைவியும், ஸ்ரீராம் (12), சாய்ஸ்ரீ (10) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று அதிகாலையில், பூபதியின் தங்கை பூங்கொடியை செல்போனில் தொடர்பு கொண்ட சுஜிதாஸ்ரீ, பதற்றத்துடன் பேசினார். மகன் ஸ்ரீராமுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதியில் ஒருவரிடம் மந்திரித்து கயிறு கட்டுவதற்காக வந்தபோது, சிலர் உங்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தனது நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் அதிர்ச்சி தகவலைக் கூறினார்.

உடனடியாக பூங்கொடி ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காரின் முன் இருக்கையில் சாய்ந்த நிலையில் பூபதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

பூபதி தங்கை பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பூபதி உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் அரிவாளால் வெட்டியது போல் இல்லாமல், அரிவாள்மனையால் வெட்டியது போல் இருந்ததும், காரில் வைத்து கொலை நடந்தது போன்ற தடயங்கள் இல்லாததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், நகை பறிக்கப்பட்டதாக சுஜிதாஸ்ரீ கூறிய நிலையில், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

வேறு எங்கோ கொலை செய்துவிட்டு, உடலை இங்கு கொண்டு வந்து வைத்து சுஜிதாஸ்ரீ நாடகம் ஆடுகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சுஜிதாஸ்ரீ முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த கொடூர சம்பவம் அம்பலமானது.

சுஜிதாஸ்ரீக்கு ஏற்கனவே பலருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. திருமணம் ஆகாத வாலிபர்களுடன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தற்போது எதிர் வீட்டில் வசிக்கும் பெங்களூரில் பணியாற்றும் ஐடி ஊழியரான சந்தோஷ் ராஜ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து அறிந்த பூபதி, சுஜிதாஸ்ரீயை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு முற்றியது. அப்போது சுஜிதாஸ்ரீ, பூபதியை கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் அடிபட்டு பூபதி மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து சுஜிதாஸ்ரீ தனது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் பல்வேறு இடங்களில் குத்தி கொலை செய்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட பூபதியின் உடலை காரில் முன் சீட்டில் அமர வைத்து, ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் ஆட்டுக்காரனூர் அருகே சரபங்கா ஆற்று ஓரமாக காரை நிறுத்தி, கோவிலுக்கு செல்லும்போது நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து போலீசார் சுஜிதாஸ்ரீயை கைது செய்தனர். கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Newsஓமலூர்கொலை நாடகம்சந்தோஷ் ராஜ்சுஜிதாஸ்ரீசேலம்தர்மபுரிபூபதி கொலைபென்னாகரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கியா சொரெண்டோ ஹைப்ரிட் எஸ்யூவி வாகனம் கியா சொரெண்டோ ஹைப்ரிட்: விலை விவரங்கள் மற்றும் போட்டியாளர்கள்
Next Article நடிகை மாளவிகா மோகனன் பார்த்தசாரதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன் பார்த்தசாரதி கோவிலில் சாமி தரிசனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தில் சிக்கிய கார்

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் ரயில்வே கேட்டில், ரயில் வரும்போது கேட்டை கடக்க முயன்ற…

செப்டம்பர் 25, 2026

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

தமிழக வெற்றிக் கழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

சிறுநீரகத் திருட்டு வழக்கு: விசாரணை தீவிரம் – தவெக அரசு அதிரடி!

சட்டவிரோத கிட்னி திருட்டு வழக்கு: தமிழக வெற்றிக் கழக அரசு விசாரணை தீவிரம். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு. திமுக எம்.எல்.ஏ தொடர்புடைய மருத்துவமனை மீதும்…

2 Min Read
அமைச்சர் ரமேஷ் திருக்கோயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

கேமரா இல்லாத போன்களுக்கு அனுமதி: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

52 முக்கிய திருக்கோயில்களில் செல்போன் தடை அமல். கேமரா இல்லாத சாதாரண போன்களுக்கு அனுமதி உண்டு என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். லாக்கர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
முதலமைச்சர் விஜய் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுகிறார்
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தொகுதி மறுவரையறை தீர்மானம் தொடர்பாக, உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டையும்…

2 Min Read
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளை சுட்டிக்காட்டும் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

பள்ளிக்கரணை சதுப்பு நில அழிப்பு: த.வெ.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 'நெய்தல் மீட்சி' பணிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு. இது அழிவு திட்டம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?