உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபதேபூரைச் சேர்ந்த அவதேஷ் என்பவரை, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் பிரீத்தி. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து வந்த அவதேஷ், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தனது மனைவி பிரீத்தியை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கணவனின் தொடர்ச்சியான கொடுமைகளால் மனமுடைந்த பிரீத்தி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். சம்பவத்தன்று, தனது கணவன் அவதேஷ் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் ஜூன் 26ஆம் தேதி நடந்துள்ளது. கணவனை எரித்துக் கொன்ற கொடூரத்தை மறைக்க பிரீத்தி முயற்சித்துள்ளார். ஆனால், அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரீத்தியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிரீத்தி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You Might Also Like
சிறைச்சாலை அனுபவம்: ஒரு நாள் கைதியாக வாழ ரூ. 2000 போதும் – அசத்தல் திட்டம்!
ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறை, பொதுமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் 'சிறையை உணருங்கள்' என்ற புதிய திட்டத்தை…
1 Min Read
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடி – புதிய உச்சம்
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி கடந்த நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15.6% அதிகமாகும்.
1 Min Read
மகாராஷ்டிராவில் சோகம்: மொபைல் கேட்டு தற்கொலை செய்த மகன், அவரைத் தொடர்ந்து பெற்றோரும் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், புதிய மொபைல் கேட்டு தகராறு செய்த 19 வயது இளைஞர் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை…
2 Min Read
மத்திய பிரதேசத்தில் பாசிப்பயறு கொள்முதல் உயர்வு: விவசாயிகள் போராட்டம் வாபஸ்
மத்திய பிரதேச அரசு பாசிப்பயறு கொள்முதலை 60% உயர்த்தவும், 'இ-டோக்கன்' முறையை தற்காலிகமாக நிறுத்தவும் ஒப்புக்கொண்டதால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
1 Min Read

