வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இளைஞர் சுட்டுக்கொலை

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடியில் நேற்று காலை துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, 21 வயதுடைய அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டதாவது: 'நமது நாட்டின் புனித சின்னமான வெள்ளை மாளிகை மீது, ஒருவித வெறி மற்றும் வன்முறை உணர்வு கொண்டவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தின் போதும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அதிபர் ட்ரம்ப் நினைவு கூர்ந்தார். வாஷிங்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த பாதுகாப்புப் பகுதியை உருவாக்குவது, எதிர்கால அதிபர்கள் அனைவருக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் வெள்ளை மாளிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version