MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் நடப்பது என்ன? 2-வது நாளாக இபிஎஸ், சிவி சண்முகம் தனித்தனியே ஆலோசனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுகவில் நடப்பது என்ன? 2-வது நாளாக இபிஎஸ், சிவி சண்முகம் தனித்தனியே ஆலோசனை
தமிழ்நாடு

அதிமுகவில் நடப்பது என்ன? 2-வது நாளாக இபிஎஸ், சிவி சண்முகம் தனித்தனியே ஆலோசனை

Admin
Last updated: May 10, 2026 6:29 pm
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்தது. 47 இடங்களை வென்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். இந்த தோல்வி அ.தி.மு.க.வில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தமிழகத்தில் நிகழும் அரசியல் மாற்றங்களால் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.வரலாறு காணாத வகையில், தி.மு.க.-அ.தி.மு.க. புதிய கூட்டணி உருவாக போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி நேற்று காலை விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்து கூறினார். அதோடு திமுக – அதிமுக கூட்டணி என்று பரவிய கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .எனினும், எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் இடையே அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர். எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாகவே எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டில் தனியாக மற்றொரு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 37 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார் மற்றும் அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜியும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரே நாளில் 2 ஆலோசனை கூட்டங்கள், அதுவும் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சிவி சண்முகமும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சிவி சண்முகம் தலைமையிலான குழுவில் எஸ்.பி வேலுமணி, சி விஜயபாஸ்கர் என முக்கிய நிர்வாகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்துவதால் அதிமுக மீண்டும் பிளவை நோக்கி செல்கிறதா? என்ற பரபரப்பு அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை சிவி சண்முகம் தரப்பு எடுக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘ஒன்றிய அரசின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ – பிரதமர் வாழ்த்துக்கு விஜய் நன்றி
Next Article எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்காக தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்ட முயற்சி கை கொடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை…

1 Min Read
தமிழ்நாடு

மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின் தமிழக முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. முதன்முறையாக போட்டியிட்டதால், விஜய் உடன்…

4 Min Read
தமிழ்நாடு

திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?