MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய பிரபாகரன் தேர்தல் தோல்வி வீடியோ: தேமுதிகவினர் போராட்டம், 83 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய பிரபாகரன் தேர்தல் தோல்வி வீடியோ: தேமுதிகவினர் போராட்டம், 83 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய பிரபாகரன் தேர்தல் தோல்வி வீடியோ: தேமுதிகவினர் போராட்டம், 83 பேர் கைது

தமிழ்நாடு

விஜய பிரபாகரன் தேர்தல் தோல்வி வீடியோ: தேமுதிகவினர் போராட்டம், 83 பேர் கைது

Fernandez
Last updated: ஜூலை 25, 2026 1:11 மணி
Fernandez
Share
தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது
விஜய பிரபாகரன் தேர்தல் தோல்வி வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகக் கூறி தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்டனர்.
SHARE

விருதுநகரில் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில், விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்வி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, த.வெ.க எம்.எல்.ஏ. செல்வம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. விருதுநகரில் உள்ள ஒரு திரையரங்கில், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வம், ரசிகர்களுடன் சிறப்பு காட்சியை காண வந்திருந்தார். திரைப்படத்தின் இடைவேளையின்போது, எம்எல்ஏ செல்வம் தரப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ திரையிடப்பட்டது. இந்த வீடியோவில், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒரு செய்தி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட, 'விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தோல்வி' என்ற செய்தி பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்எல்ஏ செல்வம் வாக்கு சேகரித்த காட்சிகள் மற்றும் வெற்றிக்குப் பிறகு அவர் கலந்துகொண்ட நிகழ்வுகள் குறித்த காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தேமுதிகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எம்எல்ஏ செல்வத்தைக் கண்டித்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கை நேற்று தேமுதிகவினர் முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட மொத்தம் 83 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். எம்எல்ஏ செல்வம் மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தேமுதிகவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், த.வெ.க எம்எல்ஏ செல்வன் நேற்று இரவு வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளியால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால், அதற்காக மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MLA SelvamTheDMDKVijayapraphakaranVirdhunagarஎம்எல்ஏ செல்வம்தேமுதிகதேர்தல் தோல்விவிருதுநகர்விஜய பிரபாகரன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம் காவல் மரணங்கள்: முதல்வர் எப்போது பேசுவார்? ஸ்டாலின் கேள்வி
Next Article முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிரீஸ் ஸ்ரீகாந்த் சிவம் துபே ஆல்-ரவுண்டர் இல்லை: கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் கிண்டல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மிஸ் யூனிவர்ஸ் இந்தியா மணிகா விஸ்வகர்மா

மாணவர் போராட்டம் நீதிக்கானது – மணிகா விஸ்வகர்மா

‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா’ மணிகா விஸ்வகர்மா, மாணவர்களின் போராட்டங்கள் நீதிக்கான கோரிக்கைகள் என்றும்,…

ஜூலை 25, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே: ‘நாங்கள் சாதித்துவிட்டோம்!’

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, மத்திய கல்வி…

ஜூலை 25, 2026

மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்…

ஜூலை 25, 2026

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: சிஜேபி களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது…

ஜூலை 25, 2026

ஜூலை 20 போராட்டம்: 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில்…

ஜூலை 25, 2026

You Might Also Like

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட காட்சி
தமிழ்நாடு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை மர்ம நபர்கள் அழித்துள்ளனர். முக்கிய ரயில்கள் நிற்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

1 Min Read
பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

பாமகவை விட்டு விலகும் முன்னாள் எம்.எல்.ஏ அருள்: அன்புமணியை ஏற்க மறுப்பு

பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள், அன்புமணியை தலைவராக ஏற்கப் போவதில்லை என்றும், அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் இந்த…

1 Min Read
தமிழ்நாடு

பதவிக்காக அணி மாறுவது தவறு – கிருஷ்ணசாமி விமர்சனம்

தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி நியமனம் தவறானது என்றும், பதவிக்காக கட்சிகள் மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

1 Min Read
குற்றவாளி காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
தமிழ்நாடு

நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம் அதிரடி

நாகர்கோவில் காசி வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?