MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தி.மு.க கூட்டங்களில் இதைச் சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தி.மு.க கூட்டங்களில் இதைச் சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தி.மு.க கூட்டங்களில் இதைச் சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

தமிழ்நாடு

தி.மு.க கூட்டங்களில் இதைச் சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

Fernandez
Last updated: செப்டம்பர் 28, 2026 7:12 காலை
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யும் காட்சி
மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரசாரம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
SHARE

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரக் களத்தில், முதலமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "ஓம் சக்தி பராசக்தி" என முதலமைச்சர் விஜய் முழங்க, அதற்குப் போட்டியாக "ஓம் காளி ஜெய் காளி, த.வெ.க ஒரு ஓடுகாலி" என உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இந்த முழக்கம் இனி தி.மு.க கூட்டங்களில் எதிரொலிக்கும் என அவர் அறிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், முதலமைச்சர் விஜயை கடுமையாகச் சாடிப் பேசினார்.

"இன்று செப்டம்பர் 27. கடந்த ஆண்டு இதே தேதியில் நடந்ததை நினைவூட்டத் தேவையில்லை. உங்கள் அனைவருக்குமே தெரியும். நம் அனைவரின் மனங்களிலும் மிகுந்த காயத்தை ஏற்படுத்திய ஒரு வடு. இதே தேதியில் தற்போதைய முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வதாகக் கூறி, கிட்டத்தட்ட 10 மணிநேரம் தாமதமாகச் சென்று, அங்கிருக்கக் கூடிய மக்களுக்கு குடிநீர் வசதியோ கழிப்பறை வசதி கூட செய்யாமல் மக்கள் நெருக்கடி ஏற்பட்டு, 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிர்கள் பறிபோன நாள்." என்று கரூர் துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மேலும் அவர், "இந்த சம்பவத்துக்காக முதல்வர் விஜய் இன்று ஆறுதலும் இரங்கலும் தெரிவிக்கிறார். ஆனால், அன்றைக்கு தெரிவித்தாரா? வண்டிமேல் ஏறி பாட்டு பாடிவிட்டு, அவர் கண் முன்னாலேயே 20 பேர் இறந்தபோதும்கூட அங்கிருந்து ஓடி திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று விட்டார். அங்கேயும் மக்களுக்கோ பத்திரிகையாளர்களுக்கோ பதிலளிக்காமல் சென்றுவிட்டார். சென்னை விமான நிலையத்தை அவர் அடையும்போது 40 பேர் இறந்துவிட்டனர். அப்போதும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை." என்று குற்றம் சாட்டினார்.

"கரூர் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. எந்தவொரு குற்ற உணர்ச்சியோ கொஞ்சம்கூட மனசாட்சியோ இல்லாமல் ஓடிப்போனவர்தான் இன்றைய ஓடுகாலி முதலமைச்சர். இன்றைக்கு வேண்டுமானால் மக்களை ஏமாற்றி அவர் முதலமைச்சர் ஆகியிருக்கலாம். ஆனால், இதை நினைத்து அவரால் ஒருநாள்கூட நிம்மதியாக தூங்க முடியாது." என்று உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் விஜய் கடந்த காலங்களில் தி.மு.க-வை விமர்சனம் செய்ததைக் குறிப்பிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கடந்த 2 ஆண்டுகளாக விஜய் தி.மு.க தீயசக்தி என்று கூறி வந்தார். அப்போதெல்லாம் நாம் (தி.மு.க) ஆளுங்கட்சியாக இருந்தோம்; அவர் எதிர்க்கட்சியாக இருந்தார். இப்போது நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க ஒரு ஓடுகாலி’ என்று சொல்லுங்கள். இனிவரும் ஒவ்வொரு தி.மு.க கூட்டத்திலும் இதனைச் சொல்ல வேண்டும்." என்று தி.மு.க தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.

"இன்று இரு தொகுதிகளிலும் வந்த இடைத்தேர்தல் இயற்கையாக வந்ததா? இந்த இடைத்தேர்தல் வந்ததற்கு யார் காரணம்?" என்று கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், "சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க-வினருக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இன்றைக்கு நடக்கக்கூடிய ஆட்சி, நாம் போட்ட பிச்சையில்தான் நடக்கிறது. ஏனெனில், நம்முடன் கூட்டணி வைத்து, நம் தலைவரின் பெயரைச் சொல்லி, வாக்கு சேகரித்து வெற்றி பெற்றவர்களின் தயவால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் இந்த ஆட்சியை தி.மு.க போட்ட பிச்சை என்கிறோம்." என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், "விஜய் முதலமைச்சராவதற்காக தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு ஷோஃபா அனுப்பினார். அ.தி.மு.கவையும் இரண்டாகப் பிளந்து, அங்கிருந்த ஒரு சில தலைவர்களுக்கு மட்டும் ஷோஃபா கொடுத்து, அவர்களின் எம்.எல்.ஏ-க்களையும் அழைத்தார். தி.மு.க-வினர் மக்களுக்குக் காசு கொடுப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு வைத்த முதல்வர், எம்எல்ஏ-க்களையே காசுகொடுத்து தூக்கிவிட்டார். அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது" என்று முதலமைச்சர் விஜயை குற்றம் சாட்டினார்.

முன்னதாக, மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (25.09.2026) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "இங்கே நான் ஒருத்தராக வரவில்லை, எப்போதும் போல உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு மகனாக, உங்க வீட்டு அண்ணனாக, உங்க வீட்டு தம்பியாக நான் வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும், ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா, உங்கள் த.வெ.க ஆட்சிக்கு வரக்கூடாதா, ஒரு தனி கட்சியாக, சாமானியர்களுடைய ஒரு கட்சியாக, பெண்கள் பேராதரவுடன் இளைஞர்களின், பேராதரவுடன், குடும்பங்களின் பேராதரவுடன், பெண்களுடைய பாதுகாப்புக்காக, போதை பொருளை ஒழிக்க, ரொம்ப முக்கியமாக லஞ்சத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? பிறகு ஏன் இந்த தி.மு.க தினமும்… மன்னிக்கணும் கொஞ்சம் டச் விட்டுப்போய் விட்டது. தீய சக்தி தி.மு.க” என்று குறிப்பிட்டிருந்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu PoliticsTVKஉதயநிதி ஸ்டாலின்தமிழக அரசியல்தவிகதிமுகமதுராந்தகம் இடைத்தேர்தல்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள் மற்றும் பானங்கள் குறித்த தகவல் நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அருந்த வேண்டியவை!
Next Article நடிகர் சிவராஜ்குமார் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் குறித்து பேசுகிறார் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட சிவராஜ்குமார்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

தேர்தல் ஆணையர் பதவி நீக்கம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பிரதமர்…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு போக்சோ குற்றமா? – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது போக்சோ…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜர்
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை முன் ஆஜரான எ.வ.வேலு: விசாரணை தீவிரம்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மீது சாலை அமைக்கும் பணிகளில் 3.23 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை…

1 Min Read
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் கைது நாடகம்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

உதயநிதி ஸ்டாலின் கைது வெறும் நாடகம் என்றும், த.வெ.க. அரசின் பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்க்கு நல்ல…

2 Min Read
தமிழ்நாடுலைஃப் ஸ்டைல்

தெருநாய்கள்: மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தல்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அறநிலையத் துறை ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு

கோயில் சொத்து மீட்பு: முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கோயில் சொத்து மீட்பு, பக்தர் பாதுகாப்பு, மற்றும் கோயில்களில் முறைகேடுகளைத் தடுப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?