விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

நடிகரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்

நடிகரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வரவிருந்தது. கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, விவாகரத்து வழங்க வேண்டும் என சங்கீதா தனது மனுவில் கோரியிருந்தார். மேலும், தனக்கு ஜீவனாம்சம் வழங்கவும், நீலாங்கரையில் உள்ள வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையையும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இதற்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, காணொளி மூலம் ஆஜராக அனுமதி கோரப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறி, வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றிருப்பதால், அவரால் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இன்று மதியம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் ஒத்திவைப்பு, வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version