சட்டசபையில் பார்ட்டி ஃபண்ட் என்றேன்.. ஓட்டம் எடுத்தார்கள்: விஜய்

கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்

சட்டப்பேரவையில் 'பார்ட்டி ஃபண்ட்' என்றுதான் நான் குறிப்பிட்டேன். எந்தக் கட்சிக்கான நிதி என்று கூட நான் சொல்லவில்லை. நான் அப்படிச் சொன்னதும், அவர்கள் ஒருவிதமான பதற்றத்துடன் ஓட்டம் எடுத்தார்கள் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய், 'நான் கரூர் வந்தபோது, எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்தது என காவல்துறையினர் என்னிடம் கூறியிருக்கலாம். காவல்துறையினர் எங்களிடம் கேட்காமலேயே இந்த நிகழ்வை ரத்து செய்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. நெடுஞ்சாலையில் இருந்து காவல்துறையினரே எங்களை அழைத்து வந்த அந்த நாடகத்தை நான் நம்பிவிட்டேன். என் வாழ்வில் நான் சந்தித்த மிகப்பெரிய வலி 'கரூர் சம்பவம்'. காவல்துறையினர் என்னை அழைத்து வந்து நடத்திய அந்த நாடகத்தை அன்று நான் நம்பிவிட்டேன். கரூர் காவல்துறையை அன்று நான் நம்பியது என் வாழ்வில் ஒரு பெரிய வலியைத் தந்தது'

மேலும் அவர் பேசுகையில், 'ஊழலை எல்லாம் ஒழிக்க முடியாது. அது நம் இரத்தத்திலேயே கலந்துவிட்டது என்று முன்பு சொன்னவர்கள், இன்று ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் சென்று பாருங்கள். அங்கு ஒரு ரூபாய் லஞ்சம் வாங்குவது கூட இல்லை. ஆனால், எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் தோண்டத் தோண்ட ஊழல் வெளிவருகிறது. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். பிறகு எதற்கு இந்த குதிரை, ஒட்டக பேரம்?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version