கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் மற்றும் புதிய மின் வணிகத்தளத்தை நாளை (ஆகஸ்ட் 7) முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12வது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் புதிய விற்பனை நிலையங்களையும், மின் வணிகத்தளத்தையும் ஒரே நேரத்தில் திறந்து வைக்கிறார். இந்த 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள், குறிப்பிட்ட சில உயர்தரப் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் வகையில் (Elite Boutique Model) அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் இணையதளத்திற்கு மாற்றாக, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தையும் முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார். இது, தற்போதுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களின் ஒரு பிரீமியம் மற்றும் உயர்தரப் பதிப்பாகச் செயல்படும். மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாநில அளவில் சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவிக்க உள்ளார். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை உலகளாவிய சந்தையில் நேரடியாக விற்பனை செய்வதற்காக, ஒரு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும் என்றும், ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் 'வெற்றித் தறி' ஷோரூம்கள் அமைக்கப்படும் என்றும் தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புதிய விற்பனை நிலையங்கள் மற்றும் மின் வணிகத்தளம், தமிழக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் தயாரிப்புகளுக்கு ஒரு புதிய சந்தையையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை ‘வெற்றித்தறி’ விற்பனை நிலையத்தை விஜய் தொடங்கிவைக்கிறார்

Senior Reporter
Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை
