MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டெல்லி சென்ற முதல்வர் விஜய்: இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - டெல்லி சென்ற முதல்வர் விஜய்: இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இந்தியா

டெல்லி சென்ற முதல்வர் விஜய்: இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Admin
Last updated: மே 27, 2026 3:55 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற தவெக கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமரை அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள், மேகதாது அணை விவகாரம், மற்றும் 'பி.எம்.ஸ்ரீ' திட்டம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விரிவான மனுவை முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பிற்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்-அமைச்சர் விஜய் இன்று இரவு டெல்லியில் தங்கிவிட்டு, நாளை (வியாழக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார். அதன் பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சந்திப்புகளையும் முடித்த பிறகு, நாளை அன்றே முதல்-அமைச்சர் விஜய் சென்னை திரும்ப உள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்டெல்லி பயணம்தமிழ்நாடு அரசுபிரதமர் மோடிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனிதநேயம் தழைத்தோங்க பக்ரீத் வாழ்த்து – முதல்வர் விஜய்
Next Article வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

பாகிஸ்தான் எச்சரிக்கை: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி கடும் நடவடிக்கை!

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால், பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி எச்சரித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மும்பையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு, பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min Read
சினிமா

ஆன்மிக அரசியலுக்கு ராகவா லாரன்ஸ் ஆதரவு – வைரல் வீடியோ

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், 2018ல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கியபோது அவருக்கு ஆதரவாகப் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min Read
இந்தியா

16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை: பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு அதிரடியாக 16 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?