MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: Vespa S 150: அசத்தும் மைலேஜ், வசீகரமான தோற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > பிசின்ஸ் > ஆட்டோமொபைல் > Vespa S 150: அசத்தும் மைலேஜ், வசீகரமான தோற்றம்!
ஆட்டோமொபைல்

Vespa S 150: அசத்தும் மைலேஜ், வசீகரமான தோற்றம்!

Fernandez
Last updated: July 2, 2026 8:12 am
Fernandez
Share
SHARE

இந்தியாவில் இரு சக்கர வாகன சந்தையில் வெஸ்பா நிறுவனம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்துள்ளது. குறிப்பாக, பெண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்படும் இவர்களின் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில், Vespa S 150 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், மைலேஜ் மற்றும் விலை குறித்த தகவல்களை விரிவாகக் காண்போம்.

Vespa S 150 ஸ்கூட்டர் மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. அதன் விலை விவரம்: 1. S 150 Standard – ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரத்து 604. 2. S 150 Tech 150 – ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரத்து 621. இதில், இரண்டாவது வேரியண்டில் ப்ளூடூத், ஜிபிஎஸ், ஸ்டாண்ட் அலார்ம் போன்ற கூடுதல் வசதிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 149.5 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோ மற்றும் இருக்கை உயரம் 770 மி.மீட்டர் ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியும் இதில் உண்டு.

இந்த ஸ்கூட்டர் மஞ்சள், கருப்பு, பச்சை, சாம்பல் என மொத்தம் 10 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 7.4 லிட்டர். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால், 260 கி.மீட்டர் முதல் 295 கி.மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 35 முதல் 40 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 93 கி.மீட்டர் ஆகும். 1 சிலிண்டர், ஏர் கூல்ட் மற்றும் 3 வால்வுகள் கொண்ட எஞ்சின், பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்பக்கம் ட்ரம் பிரேக் மற்றும் அலாய் சக்கரங்கள் என பல அம்சங்கள் இதில் உள்ளன.

முன்பக்கம் 11 இன்ச் சக்கரங்களும், பின்பக்கம் 10 இன்ச் சக்கரங்களும் ட்யூப்லெஸ் டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் ஹைட்ராலிக் சிங்கிள் சைட் ஆர்ம் சஸ்பென்சன் மற்றும் பின்பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் உள்ளது. மேலும், 60 ஆயிரம் கி.மீட்டர் அல்லது 5 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. ஸ்பீடோமீட்டர் அனலாக் முறையிலும், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ், 2 ட்ரிப்மீட்டர்கள், லோ ஃபியூல் இண்டிகேட்டர், நேரம் பார்க்கும் வசதி ஆகியவை டிஜிட்டல் முறையிலும் உள்ளன. எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் வசீகரமான தோற்றம் பெண்களை வெகுவாகக் கவர்ந்தாலும், இதன் வேகம் மற்றும் மைலேஜ் இளைஞர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதன் உயர்தரமான அம்சங்கள் காரணமாகவே இதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Vespa S 150இந்தியாவில் ஸ்கூட்டர்மைலேஜ்விலைஸ்கூட்டர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஜூன் கார் விற்பனை: டாடா கம்பேக், மஹிந்த்ரா ஷாக்!
Next Article அபிஷேக் சர்மா: டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்திய வீரர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் அதிமுக…

July 2, 2026

திருமண நாள் கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தற்கொலை: கணவன் கைது

திருமண நாளைக் கொண்டாடிய 2 நாட்களிலேயே, கணவனின்…

July 2, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.96 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மட்டும்…

July 2, 2026

கொச்சியில் போதைப்பொருள் விற்ற இருவர் கைது: திரைத்துறையினர் இலக்கு

கேரள மாநிலம் கொச்சியில், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள்…

July 2, 2026

அமர்நாத் யாத்திரை நாளை தொடக்கம்: உச்சகட்ட பாதுகாப்புடன் பக்தர்கள் புறப்பட்டனர்

புனித அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது. துணை…

July 2, 2026

You Might Also Like

ஆட்டோமொபைல்

ரூ.6000-ல் 7 சீட்டர் எஸ்யுவி: நிசான் க்ராவைட் முழு விவரம்!

இந்தியாவின் மலிவான 7 சீட்டர் எஸ்யுவி நிசான் க்ராவைட் அறிமுகம். 19 கிமீ மைலேஜ், 4 ஸ்டார் பாதுகாப்புடன் வெறும் ரூ.6000-ல் கிடைக்கிறது.

1 Min Read
ஆட்டோமொபைல்

ஜூலையில் மாருதி, எம்ஜி, நிசான் கார்களின் புதிய எஸ்யூவிகள் அறிமுகம்!

ஜூலை மாதம் இந்திய வாகன சந்தையில் மாருதி, எம்ஜி, நிசான் நிறுவனங்களின் புதிய எஸ்யூவிகள் அறிமுகமாகின்றன. மாருதி ப்ரீஸா ஃபேஸ்லிஃப்ட் ஜூலை 23 அன்று அறிமுகம்.

1 Min Read
ஆட்டோமொபைல்

Keeway SR125: கம்பீரமான தோற்றம், கவர்ச்சிகரமான விலை!

Keeway SR125 பைக் இந்தியாவில் அறிமுகம். கம்பீரமான தோற்றம், 125 சிசி எஞ்சின், 5 கியர்கள், 100 கிமீ டாப் ஸ்பீடு, 681.5 கிமீ மைலேஜ். விலை…

2 Min Read
ஆட்டோமொபைல்

PURE EV மின்சார வாகனங்கள்: 100-170 கி.மீ மைலேஜ்!

PURE EV நிறுவனம் இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. EPluto 7G, EcoDryft, Etryst 350, ETrance Neo போன்ற மாடல்கள் 100 முதல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?