வீரமணி வழக்கு: மறைக்க முயன்றவர்கள் மீது தனி வழக்கு – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்புடைய சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளை தப்பிக்கச் செய்ய முயன்றவர்கள் மீதும் தனி வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் தொழிலதிபர் ஜெம் வீரமணி என்பவரால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தினமும் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமிகள் சீரழிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தும், குற்றவாளிகளை தப்பிக்கச் செய்ய கடந்த காலங்களில் முயற்சி செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

குழந்தைகளை தெய்வமாகக் கொண்டாடும் தமிழர்களின் பண்பாட்டை மீறி, குழந்தைகளின் வறுமையைப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பணத்தை ஆயுதமாகக் கொண்டு சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் இருப்பவர்கள் அவர்களை சீரழிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த கொடுமை பல பத்தாண்டுகளாக தொடர்ந்திருக்கிறது.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியே இது குறித்து காவல்துறையில் ஆதாரங்கள் அளிக்கப்பட்ட போதிலும், தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, போதிய ஆதாரங்கள் இல்லாததாகக் கூறி, அந்த வழக்கு கைவிட அனுமதி கோரி கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், அந்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்து விட்டதன் பயனாகவே, இந்த கொடுமையில் சம்பந்தப்பட்ட பலரும் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் சென்னை போக்சோ நீதிமன்றம் காட்டிய அக்கறையும், கடுமையும் பாராட்டத்தக்கவை.

சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசாரணையில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில், தேவைப்பட்டால் போக்சோ வழக்கு பிரிவுகளை மாற்ற வேண்டும்.

சிறுமி சீரழிக்கப்பட்டது மட்டுமின்றி, அதற்கு துணையாக இருந்தவர்கள், வழக்கிற்கு மூடுவிழா நடத்த முயன்றவர்கள் ஆகியோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version