மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு

தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என ஆ.ராசா கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, 'எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் ஆ.ராசா பேசி வருகிறார். விசிகவினரை குறிவைத்து தேவையற்ற வார்த்தைகளை அவர் பேசுவதை நிறுத்த வேண்டும். சர்ச்சையாக பேசும் ஆ.ராசாவை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், '2006 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற விசிக, அப்போதைய திமுக ஆட்சிக்கு ஆதரவு அளித்தது அவருக்கு நினைவில்லையா?' என கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் பேச்சுக்கள் மனப்பிறழ்வு நோயின் அறிகுறியாக தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் வன்னி அரசுவின் இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் பேச்சுக்கள் குறித்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கண்டனம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version