MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

உலகம்

ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

Admin
Last updated: மே 26, 2026 10:12 காலை
Admin
Share
SHARE

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா இன்று அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் பண்டர் அபாஸ் நகரில் உள்ள ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியிலும் ஈரான் கடற்படைக்கு சொந்தமான படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதல்களால் பலர் உயிரிழந்தனர். மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியதால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா ஏப்ரல் 7ம் தேதி அறிவித்தது. இதற்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியைக் கைவிட வேண்டும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரியது. அதேபோல், ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தாக்குதலை நிறுத்த வேண்டும், ஹர்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்தது.

தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று நடத்தியுள்ள இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டாலும், இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்குமா அல்லது பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டு போர் மீண்டும் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:US attack Iranஅமெரிக்காஈரான்தாக்குதல்போர் பதற்றம்மத்திய கிழக்கு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்
Next Article பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

உலகம்

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் அறிவிப்பு; அமெரிக்கா மறுப்பு

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த தகவலை அமெரிக்க தரப்பு மறுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

0 Min Read
உலகம்

சீன நிலக்கரி சுரங்க விபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 200 பேர் மீட்பு

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி…

1 Min Read
உலகம்

சீனாவில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், பலர் சிக்கலாம்!

சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1 Min Read
இந்தியா

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான சேவைகள் ஜூலை 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி - டெல் அவிவ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?