MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாடு

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 19, 2026 6:59 மணி
Fernandez
Share
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
SHARE

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனங்கள், ஓட்டுநர்கள் மற்றும் வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவித்துள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது 'கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது' போன்ற செயல் என அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகும். முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், அதை தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல் போன்ற தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

"மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்" என வீரவசனம் பேசிய முதலமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்திலிருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்? எனவே, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MLA Car SchemeTamil Nadu Politicsஅமமுகடிடிவி தினகரன்தமிழக சட்டமன்றம்தவெகஜோசப் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிடுதல் மாணவர் பேரவை தேர்தல்கள்: ஜனநாயக உரிமையை பறிக்காதீர் – இந்திய கம்யூனிஸ்ட்
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் மானவ் சுதர் பந்து வீசுகிறார் 10 விக்கெட் வீழ்த்தி இலங்கையை சுருட்டிய 24 வயது இந்திய புயல் மானவ் சுதர் !
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

வாழ்க்கையில் 2 பெரும் தவறுகள் செய்தேன்: வைகோ பரபரப்பு அறிக்கை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்க்கையில் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணியை பெரும் தவறுகள் என குறிப்பிட்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2 Min Read
முன்னாள் பாஜக தலைவர் கே. அண்ணாமலை
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு அண்ணாமலை பாராட்டு!

முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைக்கு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் சில கடைகளை மூடவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 Min Read
வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு மாறியது குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே புதிய…

2 Min Read
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

முதல்வர் கோப்பை: ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்!

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது. புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டிகள் செப்டம்பர் 4 முதல் தொடக்கம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?