நீட் ஒரு தகுதித் தேர்வு – டிடிவி தினகரன்

நீட் தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு என்பது ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பு அல்ல என்றும், அது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் இந்த தேர்வை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், மன தைரியத்துடன் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், நீட் தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version