ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட டொயோட்டா, உலகளவில் மிகவும் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையிலும் டொயோட்டா கார்களுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உண்டு. இந்நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள ஐந்து புதிய கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மாடல்கள், வாகன ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதலிடத்தில், டொயோட்டாவின் புகழ்பெற்ற இன்னோவா வரிசையில் புதிய வரவாக Toyota Innova Hycross Facelift எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரின் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே பல இடங்களில் காணப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல், 173 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரக்கூடும். மேலும், 184 பிஎஸ் ஆற்றல் கொண்ட ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்சனும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.
இரண்டாவது இடத்தில், டொயோட்டாவின் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றான Toyota Glanza-வின் புதிய அப்டேட் வெர்சன், Toyota Glanza Facelift அறிமுகமாக உள்ளது. இந்த புதிய மாடலில் மேம்பட்ட ADAS (Advanced Driver-Assistance Systems) வசதி இடம்பெறுகிறது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என்றும், மேலும் சிஎன்ஜி வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கிளான்சா காரின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மூன்றாவது இடத்தில், டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மின்சார கார் மாடலான Toyota Electric MPV இடம்பெறுகிறது. இந்த 3-வரிசை MPV, 2027 அல்லது 2028 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன நிறுவனமான BYD-யின் E-MAX 7 காருக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது.
நான்காவது இடத்தில், இந்தியாவின் மிகவும் பிரபலமான SUV மாடலான Toyota Fortuner-ன் புதிய தலைமுறை (New-Generation Toyota Fortuner) இந்த ஆண்டு அல்லது 2027 ஆம் ஆண்டு அறிமுகமாகலாம். இந்த புதிய தலைமுறை மாடல், 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். மேலும், மேம்பட்ட ADAS வசதி மற்றும் நவீன கேபின் வசதிகளுடன் இது வரவுள்ளது.
ஐந்தாவது இடத்தில், டொயோட்டாவின் மற்றொரு பிரபலமான மாடலான Toyota Land Cruiser வரிசையில் புதிய வரவாக Toyota Land Cruiser FJ அறிமுகமாக உள்ளது. இந்த கார் 163 பிஎஸ் ஆற்றலையும், 246 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரக்கூடும்.
டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கு எப்போதும் சந்தையில் ஒரு தனி இடமுண்டு. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து புதிய மாடல்களும், இந்திய வாகன சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, Glanza Facelift மற்றும் New-Generation Toyota Fortuner கார்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
