இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களான மின்சார கார்களின் தேவையும் மக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக, ரூ.15 லட்சம் பட்ஜெட்டிற்குள் வாங்கக்கூடிய சிறந்த மின்சார கார்கள் பற்றிய தகவல்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மைலேஜை அள்ளித் தரும் டாப் 8 மின்சார கார்களின் பட்டியல் இதோ:
டாடா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான Tata Tiago EV, குறைந்த விலையில் கிடைக்கும் மின்சார கார் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ.7.38 லட்சம் முதல் ரூ.10.66 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் 4 வேரியண்ட்கள் உள்ளன. 19.2 கிலோவாட் மற்றும் 24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 280 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
எம்ஜி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மின்சார கார் MG Comet EV ஆகும். இதன் தொடக்க விலை ரூ.8.22 லட்சமாகவும், டாப் வேரியண்ட் ரூ.10.70 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 170 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டது. இதில் 17.3 கிலோவாட் மற்றும் 17.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் உள்ளன. மொத்தம் 5 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது.
டாடா நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான மாடலான Tata Punch EV, ரூ.10.41 லட்சம் முதல் ரூ.13.83 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதில் 30 கிலோவாட் மற்றும் 40 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் உள்ளன. இந்த கார் 335 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. மொத்தம் 6 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனையாகிறது.
சிட்ரோன் நிறுவனத்தின் Citroen eC3 X, ரூ.6.98 லட்சம் என்ற தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் டாப் வேரியண்ட் விலை ரூ.11.99 லட்சம் ஆகும். இந்த மாடலில் 29.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டாடா நிறுவனத்தின் Tata Nexon EV, ரூ.13.19 லட்சம் முதல் ரூ.18.80 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் 8 வேரியண்ட்கள் உள்ளன. 30 கிலோவாட் மற்றும் 45 கிலோவாட் பேட்டரி வேரியண்ட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த கார் அதிகபட்சமாக 465 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டது.
டாடாவின் புகழ்பெற்ற Tata Tigor காரின் மின்சார வேரியண்டான Tata Tigor EV, ரூ.13.21 லட்சம் முதல் ரூ.14.53 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இந்த காரில் 4 வேரியண்ட்கள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
கியா நிறுவனத்தின் Kia Syros EV, ரூ.14.31 லட்சம் என்ற தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் டாப் வேரியண்ட் விலை ரூ.21.06 லட்சம் ஆகும். 42 கிலோவாட் மற்றும் 51.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 526 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் Mahindra XUV 3XO EV, ரூ.14.76 லட்சம் என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.16.45 லட்சம் ஆகும். இந்த மாடலில் 4 வேரியண்ட்கள் உள்ளன. 39.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 285 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
