புதிய ராசிபலன்: 29-09-2026 அன்று ராசிபலன்கள் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாளில் பல ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் குறைந்து, கடும் முயற்சிக்கு பிறகு எடுக்கும் காரியங்கள் வெற்றி பெறும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். மஞ்சள், நீலம், வெள்ளை ஆகிய நிறங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்கள் 2, 6, 9 ஆகும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். இது மிகவும் அனுகூலமான நாள். வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிர்ஷ்ட எண்கள் 5, 9.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. பச்சை, ஊதா நிறங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்கள் 1, 4, 6.
கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும். எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். மஞ்சள், சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிர்ஷ்ட எண்கள் 1, 6, 9.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. நீலம், சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்கள் 3, 5, 7.
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். மஞ்சள், சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிர்ஷ்ட எண்கள் 2, 6, 9.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். நீலம், இளஞ்சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்கள் 2, 5.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். மஞ்சள், நீலம் நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 9.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 5, 9.
மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் குறையும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். மஞ்சள், நீலம் நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 9.
கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். நீலம், இளஞ்சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்கள் 2, 5.
மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். மஞ்சள், சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். அதிர்ஷ்ட எண்கள் 2, 6, 9.

