தமிழக பட்ஜெட்: கிராமப்புற பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் 2024-25

தமிழக பட்ஜெட் 2024-25-ல் கிராமப்புற பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் 10,000 பெண்களுக்கு இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்படும். இது கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கு மொத்தம் ரூ.4880 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'கால்நடைகள் காப்போம்' திட்டத்திற்காக ரூ.31 கோடியும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க ரூ.12 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய், 'அண்ணனின் சீர் திட்டம்' என்ற புதிய திட்டத்தின் மூலம் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 12 மாவட்டங்களில் புதிய முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். மூத்த குடிமக்களின் பொழுதுபோக்குக்காக நூலகம், யோகா, தியானம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்களும் தொடங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்க 'தாய்மாமன் தங்க மோதிரம்' என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 500 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்றும், 3-ம் பாலினத்தவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில் தொடங்க அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக 5 மாவட்டங்களில் அறன் பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்படும்.

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு மட்டும் ரூ.9,818 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version