MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக பட்ஜெட்: முதலமைச்சர் புகழ்பாடும் உரையா? – வானதி சீனிவாசன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக பட்ஜெட்: முதலமைச்சர் புகழ்பாடும் உரையா? – வானதி சீனிவாசன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக பட்ஜெட்: முதலமைச்சர் புகழ்பாடும் உரையா? – வானதி சீனிவாசன் கேள்வி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: முதலமைச்சர் புகழ்பாடும் உரையா? – வானதி சீனிவாசன் கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 5, 2026 4:24 மணி
Fernandez
Share
வானதி சீனிவாசன் தமிழக சட்டசபையில் உரையாற்றுகிறார்
தமிழக சட்டசபையில் பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன்
SHARE

தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆளும் தவெக அரசின் முதல் பட்ஜெட், கடந்த ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அப்படியே நகலெடுத்து, பெயர்களை மட்டும் மாற்றி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தும், சில திட்டங்களுக்குக் கூடுதலாகவும் ஒதுக்கியுள்ளது என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தவெக அரசின் பட்ஜெட்டில் மாற்றம் கிடைக்கும் என மக்கள் காத்திருந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளது. புதிய சிந்தனைகள், புதிய பொருளாதாரக் கொள்கைகள், வருவாயைப் பெருக்கும் தொலைநோக்கு திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீட்டு அறிவிப்புகள் என தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், பட்ஜெட் உரையில் ஒன்றும் இல்லாமல் வெறும் காற்றடைத்த பலூனாக மட்டுமே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்த அரசின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புதுமையும் இதில் இடம்பெறவில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி, பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற முக்கிய வாக்குறுதிகளை அளித்தே தவெக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

தமிழகத்தின் நிதிநிலை ஏற்கனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடன் சுமை அதிகரித்து வரும் இந்த சூழலில், மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கான வலுவான பொருளாதாரத் திட்டங்கள், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. இதனால் எதிர்கால தலைமுறையின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலான தவெக அரசின் நிதி நிர்வாக அணுகுமுறை தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது.

மேலும், பட்ஜெட் உரையின் பெரும்பாலான பகுதிகளில் முதலமைச்சரைப் புகழ்ந்து பேசுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகாட்ட வேண்டிய பட்ஜெட் உரை, முதலமைச்சரின் புகழைப் பாடும் உரையாக மாறியிருப்பது நல்ல ஜனநாயக மரபு அன்று. மொத்தத்தில் இது மக்களுக்கான பட்ஜெட் உரையா? அல்லது முதலமைச்சரின் புகழ்பாடும் உரையா? என்ற கேள்வி எழுகிறது.

மொத்தத்தில், தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புதிய வழியைக் காட்டும் தொலைநோக்கு பார்வையோ, மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்களோ, இளைஞர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்கால நம்பிக்கையை உயர்த்தும் செயல்திட்டங்களோ இல்லாத வெற்று நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மாற்றத்திற்கான சிறப்பான தருணமாகக் கருதப்பட்ட தமிழகத்தின் முதல் பட்ஜெட் என்ற வரலாற்று வாய்ப்பை தவெக அரசு முழுமையாக தவறவிட்டுள்ளது என்பது ஏமாற்றத்திற்குரியது. எனினும், கடந்த அரசைப் போல் அல்லாமல் மத்திய அரசுடனான மோதல் போக்கினைக் கைவிட்டு, மத்திய அரசின் திட்டங்களான சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட சில திட்டங்கள் வாயிலாக கைகோர்த்து திட்டங்களை அறிவித்திருப்பதை வரவேற்கலாம். மத்திய மாநில அரசுகளுடன் இணைந்த வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து தவெக அரசு இன்னும் பல மக்கள் நலத் திட்டங்களைச் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Budgetதமிழக சட்டசபைதமிழக பட்ஜெட்தவெக அரசுநிதியமைச்சர் மரிய வில்சன்பாஜகவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா மோகன் ராஜா-கார்த்தி படத்தில் நயன்தாரா? திரிஷா? – பரபரப்பு தகவல்
Next Article பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகிறார் விவசாய கடன் ரத்து அறிவிப்பு: சௌமியா அன்புமணி ஏமாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான கைது நடவடிக்கை

மும்பையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது

மும்பையில் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

ஆகஸ்ட் 6, 2026

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி…

ஆகஸ்ட் 6, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.5.46 கோடி குவிந்தது: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஆகஸ்ட் 6, 2026

ஜார்க்கண்ட் அரசு பணி தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டம் 12வது நாள்

ஜார்க்கண்ட் அரசு பணி நியமனத் தேர்வில் முறைகேடு…

ஆகஸ்ட் 6, 2026

வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மங்களூருவில் வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன்…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நீட் தேர்வு அச்சம்: மேலும் ஒரு மாணவர் தற்கொலை

வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இன்று மதியம் மீண்டும் நடைபெற உள்ள நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை…

1 Min Read
தமிழ்நாடு

கும்பக்கரை அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!

அதிமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவுள்ளது. முதல்வர் விஜய் எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்குக் கொண்டுவர முயல்வதாக…

1 Min Read
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு

151 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?