திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி: பக்தர்கள் எச்சரிக்கை

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைப்பாதையில், விநாயகர் கோவிலுக்கு அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறுத்தைப்புலி ஒன்று காணப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், சிறுத்தைப்புலியைப் பிடிக்க முடியவில்லை. அது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், திருப்பதி மலைப்பாதைகளில் செல்லும் தனியார் வாகனங்கள், ஜீப்புகள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்களை நடுவழியில் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். பக்தர்கள் இரு மலைப்பாதைகளிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்லாமல், குழுவாகச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மலைப்பாதையோரம் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் காணப்பட்டால், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version