MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அரசு மதவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் – வன்னி அரசு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அரசு மதவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் – வன்னி அரசு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அரசு மதவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் – வன்னி அரசு

லைஃப் ஸ்டைல்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அரசு மதவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் – வன்னி அரசு

Admin
Last updated: ஜூன் 7, 2026 3:28 மணி
Admin
Share
SHARE

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத சக்திகளின் கோரிக்கைகளை அரசு புறந்தள்ள வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

'பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன சூழ்நிலை நிலவியதோ அது தொடர வேண்டும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள். இது தான் அரசின் கொள்கை. இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. எந்த மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்வதற்கு நூறு சதவீதம் அனுமதிக்க மாட்டோம்' என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் நேற்று (07.06.26) மதுரை செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு கடந்த ஜூன் 4ஆம் தேதி கேள்வி எழுப்பியுள்ளது.

மக்கள் தொகையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள பிறப்படுத்தப்பட்ட இந்து மக்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்தி அவர்களின் வாழ்வாதார போராட்டங்களிலும், அவர்களுக்கு மறுக்கப்படும் சமூகநீதியை உறுதி செய்வதிலும் எந்தக் காலத்திலும் அக்கறை காட்டாத பாஜக – சங்க பரிவார் அமைப்புகள், தங்கள் மதவாத அரசியலுக்கு மட்டும் 'இந்து' என்ற பெயரில் அவர்களை அணிதிரட்ட முயன்று வருகின்றனர். சனாதனிகளின் இந்த சதியை – ஏமாற்று வேலையை நன்கு அறிந்த திருப்பரங்குன்றம் மக்கள், இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாறாக பாஜகவின் குரலாக பேசிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தலில் தக்க பதிலடி தந்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடித்துவிட்டோம் என்று வட இந்தியாவில் பெரும் மதவாத அரசியலை முன்னெடுத்த பாஜகவை, அதே அயோத்தி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் படுதோல்வி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அங்கு சமாஜ்வாதி கட்சியின் முன்னணி தலித் தலைவர்களில் ஒருவரான திரு. அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். இத்தகைய பதிலை தான் தமிழ்நாட்டில் மதவாத பிளவுவாத அரசியலை முன்னெடுத்த பாஜக அணிக்கு மக்கள் கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களால் புறந்தள்ளபட்ட 'Fringe Elements'-ஐ நமது தமிழ்நாடு அரசும் அவ்வாறே அணுக வேண்டும். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் நடைமுறையை தொடருவதற்கான சட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். மதவாத சக்திகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருப்போம்!

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Thiruparankundramதமிழ்நாடு அரசுதிருப்பரங்குன்றம்தீபம்மதவாதம்வன்னி அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. ஆட்சி 3 மாதங்களாவது நீடிக்குமா? ஸ்டாலின் கேள்வி
Next Article 20 நாட்கள் படக்காட்சிகள் நீக்கம்: கமல்ஹாசன் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு: முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்ததாகக்…

ஆகஸ்ட் 21, 2026

ஆசிரியர் அறைந்ததில் மாணவன் உயிரிழப்பு: விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சி

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் எழுதாத 6 வயது மாணவனை…

ஆகஸ்ட் 21, 2026

கேரளாவிற்கு விலக்கு: கட்டுமானப் பொருட்கள் விவகாரத்தில் விஜய் உறுதி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அரியலூர் பள்ளி: பல்லி கலந்த உணவு, 90 மாணவர்கள் பாதிப்பு!

அரியலூர் பள்ளியில் பல்லி கலந்த மதிய உணவை சாப்பிட்ட 90 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கிராம்பு பொடி: நோய்களை விரட்டும் அற்புத மருந்து!

சித்த மருத்துவத்தில் கிராம்பு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வாய் துர்நாற்றம், ஈறு பிரச்சனைகள், ஜீரணக் கோளாறுகள், வாந்தி, காலரா, தொண்டை எரிச்சல், ஈறு வீக்கம், பல்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஸ்டுட்கார்ட் ஓபன்: தியாபே காலிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாபே, ரிங்கி ஹிஜிகதாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஜிரி லெஹெகாவுடன் மோதுகிறார்.

0 Min Read
சுவர் ஓரமாக வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டி
லைஃப் ஸ்டைல்

சுவரை ஒட்டிய ஃபிரிட்ஜ்: செலவு அதிகம், இப்படி வெச்சு பாருங்க!

ஃபிரிட்ஜை சுவரோடு ஒட்டி வைப்பது மின் செலவை அதிகரிக்கும். சரியான இடைவெளி விட்டு, காற்றோட்டமான இடத்தில் வைப்பதன் மூலம் ஃபிரிட்ஜின் ஆயுளை அதிகரிக்கலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?