MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

லைஃப் ஸ்டைல்

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

Admin
Last updated: மே 9, 2026 7:00 மணி
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது, 108 இடங்களைப் பெற்றும் தவெக ஆட்சியமைக்க விசிக தடையாக இருந்துவிடக் கூடாது என்ற 2 காரணங்களுக்காக மட்டுமே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து வழங்கியிருக்கிறோம் என்றார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது. தவெகவை தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதால் தவெக வசம் தற்போது 120 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியது: “தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக இடம்பெற்று 8 தொகுதிகளில் போட்டியிட்டதில் 2-ல் நாங்கள் வெற்றி பெற்றோம். அதேபோல் இடதுசாரிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன.

இந்நிலையில் விசிக, இடதுசாரிகள் இணைந்து பேசினோம். மக்கள் நலக் கூட்டணி இருந்தபோதே கொள்கை அடிப்படையிலும், மக்கள் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து களமாடி வருவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்தச் சூழலில் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து முடிவெடுப்போம் என்று கலந்து பேசினோம். இந்த நிலையில் சிபிஎம், சிபிஐ மாநிலக் குழுவில் எடுத்த முடிவை ஒட்டி விசிக உயர்நிலைக் கூட்டத்தில் கலந்தாலோசித்து உயர்நிலைக் குழு ஒப்புதலோடு முடிவை அறிவிப்பது என முடிவு எடுத்தோம்.

முதலில் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவை இடதுசாரிகள் எடுத்தார்கள். அதன் அடிப்படையில் விசிக உயர்நிலைக் கூட்டம் இணையவழியில் நடந்தது. உயர் நிலைக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், விசிக பொதுச் செயாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறப்பினரோடு கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளோம்.

தமிழகத்தில் இந்த அரசியல் சிக்கலை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையிலும், 108 இடங்களோடு தவெக திணறிக் கொண்டிருக்கும் நிலையில் ஆதரவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

தவெக ஆட்சியமைக்க விசிக நிலைப்பாடு தடையாக இருந்துவிடக் கூடாது, குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற இரண்டு காரணங்களால் மட்டுமே இந்த முடிவு எடுத்துள்ளோம்.

ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு அளிக்கிறோம். அதற்காக எந்த நிபந்தனையும் இல்லை. தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்” என்றார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் இருந்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி
Next Article மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி அவசரநிலைப் போராளிகளுக்கான ஓய்வூதியம் குறித்து அறிவிக்கிறார்

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களுக்கு…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பாகிஸ்தானில் அதிர்ச்சி: 7 கோடி பேர் ஏழைகள், 6 ஆண்டுகளில் 7% உயர்வு

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். வறுமை விகிதம் 21.9% இலிருந்து 28.9%…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கருப்பு படத்தில் நடித்த காட்சிகள் நீக்கம் – நடிகர் ஆர்யா அதிர்ச்சி

நடிகர் ஆர்யா, 'கருப்பு' திரைப்படத்தில் நடித்த காட்சிகள் இறுதி எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சமையல் சோடா, சலவைத்தூள் மற்றும் சர்க்கரை கலந்த கிளீனிங் பேஸ்ட்
லைஃப் ஸ்டைல்

வீட்டுச் சுத்தத்திற்கு சமையல் சோடா பேஸ்ட்: செலவு குறைவு, பலன் அதிகம்!

வீட்டுச் சுத்தத்திற்கு இனி கடைகளில் கிளீனர் வாங்க வேண்டாம்! சமையல் சோடா, சலவைத்தூள், சர்க்கரை கொண்டு எளிதாக பேஸ்ட் தயாரித்து எண்ணெய் பிசுக்குகளை விரட்டலாம். செலவு குறைவு,…

2 Min Read
ஓம நீர் அருந்தும் பெண்
லைஃப் ஸ்டைல்

இரவு முழுவதும் ஊறவைத்த ஓமநீர்: தொப்பை குறையுமா? நன்மைகள் என்ன?

ஓமத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், குறிப்பாக தொப்பையைக் குறைப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, மற்றும் தொற்று நோய்களைத் தடுப்பது பற்றி விரிவாக காண்போம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?