திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்

கோவை ஒப்பணக்கார வீதியில் திருடிய வீட்டில் தங்கியிருந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்

கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் சேஷகிரி, கடந்த மாதம் தன் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மகனைப் பார்க்கச் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், சேஷகிரியின் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள், அங்குள்ள பூஜை அறையில் இருந்த வெள்ளித் தட்டுகள், பூஜை சாமான்கள், சமையலறைப் பாத்திரங்கள் என மொத்தம் ஒன்பது கிலோ வெள்ளி மற்றும் ஏழு கிலோ பித்தளைப் பொருள்களைத் திருடிச் சென்றனர். வெறும் திருட்டுடன் நிற்காமல், அந்த வீட்டிலேயே தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கியிருந்த கொள்ளையர்கள், அங்கிருந்த சமையலறையைப் பயன்படுத்தி சமைத்துச் சாப்பிட்டு, ஓய்வெடுத்துவிட்டுச் சென்றனர். சேஷகிரி கோவை திரும்பிய பிறகுதான், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், திருடர்களைக் கைது செய்த காவல்துறையினர், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்துப் பொருட்களையும் மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version