ஜனநாயகன் படத்தைப் பார்த்து அழுத அமைச்சரை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்

'ஜனநாயகன்' படத்தைப் பார்த்தபோது கண்ணீர் சிந்திய அமைச்சர் பர்வேஸ்

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை அமைச்சர் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து கண்டுகளித்தார். படத்தின் தொடக்கத்திலேயே, குறிப்பாக நடிகர் விஜய்யின் அறிமுகக் காட்சி வந்தபோது, அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இது அருகில் இருந்த அவரது உதவியாளரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அதைப் பார்த்தபோது அவர் தேம்பித் தேம்பி அழுததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் இது விஜய்யின் கடைசிப் படம் என்பதால் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகக் கூறி அதனைப் பரப்பி வருகின்றனர். இந்தச் சூழலில், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், அமைச்சர் அழுத சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், 'இதையெல்லாம் பார்த்து நாங்கள் தான் அழ வேண்டும்' என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு பதிவில், 'எல்லாப் பக்கமும் கேமரா, போதாததற்கு ஃப்ளாஷ் லைட்டும் வேறு. தமிழக அமைச்சர் பர்வேஸ் 'ஜனநாயகன்' படத்தைப் பார்த்து அழுகிறார்' என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள விஜய்யின் ரசிகர்கள், ஒருவரின் உணர்ச்சியை ஏன் கிண்டல் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு ரசிகர் அல்லது ஆதரவாளர், விஜய்யின் கடைசிப் படம் என்ற உணர்வுப்பூர்வமான நிலையில் அழுதுகொண்டிருக்கும்போது, அதை விமர்சகர் இப்படிப் பேசுவது சரியல்ல என்று கூறி அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version