எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டி: படப்பிடிப்பு அரங்க வாடகை 50% குறைப்பு!

எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டி வளாகம்

சென்னை: எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியில் உள்ள சினிமா படப்பிடிப்பு அரங்கங்களுக்கான வாடகை கட்டணத்தை 50% குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில், தனியார் நிறுவனங்களால் அரசு அனுமதியுடன் நடத்தப்படும் படப்பிடிப்புகளுக்கான கட்டண விகிதங்களை குறைப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, படப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.

முதலமைச்சர் தலைமையில் கடந்த 17.07.2026 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், திரைப்பட படைப்பாக்க வளாகத்தில் உள்ள 3c Studios (Grid-1, Grid-2 & Grid-3) மற்றும் புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு தளங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிக வாடகை காரணமாக, குறைந்த அளவிலான படப்பிடிப்புகளே நடைபெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, 21.07.2026 அன்று இயக்குநர்/கூடுதல் செயலாளர் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், படப்பிடிப்பு தளங்களுக்கான கட்டண விகிதங்களை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு தளங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதங்களை பாதியாக குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

தயாரிப்பாளர் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று, தற்போதைய படப்பிடிப்பு தளங்களுக்கான கட்டண விகிதங்களில் 50% குறைப்பு பரிசீலிக்கப்பட்டு, அதன்படி மூன்று புதிய படப்பிடிப்பு தளங்களுக்கும், புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு தளத்திற்கும் கட்டணங்களை 50% ஆக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில், தயாரிப்பாளர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் இந்த கட்டண மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில இனங்களுக்கு புதிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மற்ற இனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையின்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையே (வரிகள் உட்பட) பொருந்தும்.

அரசின் பரிசீலனைக்குப் பின்னர், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று படப்பிடிப்பு தளங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத் தளம் ஆகியவற்றுக்கான கட்டண விகிதங்களை 50% குறைத்து, சில இனங்களுக்கு கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழ் சினிமா துறைக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version