MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆதவ் அர்ஜூனாவுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பில்லை: தவெக ஐடி விங்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆதவ் அர்ஜூனாவுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பில்லை: தவெக ஐடி விங்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஆதவ் அர்ஜூனாவுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பில்லை: தவெக ஐடி விங்

லைஃப் ஸ்டைல்

ஆதவ் அர்ஜூனாவுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பில்லை: தவெக ஐடி விங்

Admin
Last updated: ஜூன் 8, 2026 10:10 மணி
Admin
Share
SHARE

சென்னை: அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நபருக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தவெக ஐடி விங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தைரியம் இருந்தால் திமுக ஐடி விங் இதை சட்டரீதியாக நிரூபிக்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளது.

அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள தவெக ஐடி விங், 'திமுகவின் அரசியலே பொய்யும் புரட்டும் நிறைந்தது. அதன் தொடர்ச்சியாக திமுகவின் ஐடி விங், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை பரப்பி வருகிறது. தரம்தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும், உண்மைக்கு மாறான தகவல்களையும் பொதுவெளியில் பரப்புவது திமுக ஐடி விங்கிற்கு வாடிக்கையாகிவிட்டது' என கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், 'அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல், தேர்தல் தோல்வியால் பித்துப் பிடித்த மனநிலையில் உள்ள திமுக தலைமை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து வதந்திகளை பரப்புகிறது. ஐந்து வருட திமுக ஆட்சியில் போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து தமிழகத்தை நாசமாக்கியதை மக்கள் மறக்கவில்லை. தற்போது இந்த அரசு போதை கலாச்சாரத்தை ஒழிக்க போராடி வருகிறது. திமுகவின் பொய்களுக்கும், நாகரீகமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்த திமுக ஐடி விங்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்' என்றும் தவெக ஐடி விங் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav ArjunaDMK IT WingTamil Nadu Politicsதவெகபோதைப்பொருள் கடத்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நார்வே செஸ்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!
Next Article ஈரான் தாக்குதல் நிறுத்தம்: லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நீட் தேர்வு ரத்து: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்தவும், நிலுவையில் உள்ள கல்வி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

அதிமுகவில் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பண்பால் கவரப்பட்டு அக்கட்சியில் இணைந்ததாகக் கூறினார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புதப் பழங்கள்!

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் தர்பூசணி மற்றும் கிவி பழங்களின் நன்மைகள் பற்றிய விரிவான தகவல்கள்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மாணவர்களுக்கு ரூ.15,000 வரை உயர்வு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு தினசரி உணவுப்படி, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?