MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது

தமிழ்நாடு

கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 12:04 மணி
Fernandez
Share
கணவனை கொலை செய்து புதைத்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்
கணவனை கொலை செய்து புதைத்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது
SHARE

தெலுங்கானா மாநிலம் மியாப்பூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து புதைத்த பெண், 8 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்டேஷ் (45) என்பவர் மியாப்பூர் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெண்டேஷ் தனது முதல் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், 2014-ல் கணவரை விவாகரத்து செய்த சத்தியவதி (40) என்ற பெண்ணுடன் பெண்டேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக மியாப்பூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நிஜாமாபாத்தை சேர்ந்த மதுசூதன் ரெட்டி (38) என்பவர் பெண்டேஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்துள்ளார். அப்போது, சத்தியவதிக்கு மதுசூதன் ரெட்டியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதலுக்கு பெண்டேஷ் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக் கட்ட இருவரும் திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி இரவு, சத்தியவதி தனது கணவர் பெண்டேஷுக்கு தூக்க மாத்திரை கலந்த உணவை கொடுத்துள்ளார். அதனை உண்ட பெண்டேஷ் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். பின்னர், தனது கள்ளக்காதலனான மதுசூதன் ரெட்டியை அழைத்த சத்தியவதி, இருவரும் சேர்ந்து பெண்டேஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

கொலை செய்த பின்னர், பெண்டேஷின் சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு மராட்டிய மாநிலம் துல்ஜாபூருக்குச் சென்றனர். அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். உடல் பாதி எரிந்த நிலையில் இருந்ததால், அதனை அங்கேயே புதைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர், வீட்டிற்கு திரும்பிய சத்தியவதி, தனது கணவர் பெண்டேஷைக் காணவில்லை என்று மியாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவர் காணாமல் போனதாக நாடகமாடிய சத்தியவதியின் முகத்தில் எந்த சோகமும் இல்லை என்றும், அவர் மதுசூதன் ரெட்டியுடன் பல இடங்களுக்குச் சென்று வருவதையும் பெண்டேஷின் உறவினர்கள் கவனித்துள்ளனர்.

இதையடுத்து, பெண்டேஷின் உறவினர்கள் மியாப்பூர் காவல் நிலையத்தில் சத்தியவதி மீது நேரடியாகப் புகார் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கணவரைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்டேஷ் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு அவரது மனைவியும் கள்ளக்காதலனும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Illicit RelationshipMadhusudhan ReddyMurderPendesh MurderSathyavathiTelanganaகள்ளக்காதல்கொலைசத்தியவதிதெலுங்கானாபெண்டேஷ் கொலைமதுசூதன் ரெட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வெள்ளி கொலுசை சுத்தம் செய்யும் பெண் வெள்ளி கொலுசை புதுசு போல் மாற்ற எளிய வீட்டு குறிப்பு!
Next Article தமிழக அரசு அரசாணை வெளியீடு - எம்-சாண்ட் ஏற்றுமதிக்கு தடை வெளிமாநிலங்களுக்கு எம்-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்
தமிழ்நாடு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மாடல் இலவச சைக்கிள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மாடல் இலவச சைக்கிள்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்…

2 Min Read
தமிழக காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் சிக்கல் குறித்த செய்தி
தமிழ்நாடு

சிசிடிஎன்எஸ் 2.0: தமிழக அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு

சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் சிக்கலால் தமிழக காவல் நிலையங்களில் புகார் பதிவு, எப்ஐஆர் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

1 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்கள் தினம்: முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

1 Min Read
அமைச்சர் அருண்ராஜ் பேசும் காட்சி
தமிழ்நாடு

அமைச்சர் அருண்ராஜின் நகைச்சுவை பேச்சு: அ.தி.மு.க.வில் சர்ச்சை

அமைச்சர் அருண்ராஜ் 'ஆபரேஷன் சக்சஸ், அ.தி.மு.க. பேஷண்ட் டெட்' என பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது நகைச்சுவை பேச்சா அல்லது அரசியல் தாக்குதலா…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?