இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் Troll-கள்: தமிழிசை கண்டனம்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் Troll-களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் Troll-களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் மாறக்கூடாது. தன்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்லவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் ஒரு பெண் அமைச்சர் தனது பொன்னான நேரத்தை செலவிட வேண்டிய நிலை மிகவும் வேதனையானது. இத்தகைய Troll-கள் ஒரு பெண்ணின் மன அமைதியையும், தன்னம்பிக்கையையும், கவனத்தையும் பாதிக்கலாம். அவர் தனது பொறுப்பில் கவனம் செலுத்தி மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் சக்தியையும் இவை பறித்துவிடுகின்றன.'

மேலும் அவர், 'நான் ஒரு அசைக்க முடியாத BJP பெண் தலைவர். என் கொள்கையிலும், என் கட்சியிலும் நான் உறுதியாக நிற்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக நான் குரல் கொடுத்தால், உடனே என்னை “A Team”, “B Team” என்று கூறி Troll செய்ய வேண்டாம். நானும் இத்தகைய Troll-களை எதிர்கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அவற்றால் நான் அசைந்து போகவில்லை. இன்னும் உறுதியுடன், இன்னும் நம்பிக்கையுடன் நிற்கிறேன்.' எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, 'ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுப்பது எந்த “Team”-ஐச் சேர்ந்தது என்பதல்ல. அது மனிதநேயத்தின் அடையாளம். ஒரு பெண் அரசியல்வாதியை எதிர்க்க விரும்பினால்—அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள். அவரது கொள்கைகளை கேள்வி கேளுங்கள். அவரது செயல்பாடுகளை விமர்சியுங்கள். அவரது கருத்துகளுக்கு உண்மையான தரவுகளாலும், வலுவான வாதங்களாலும் பதிலளியுங்கள். அரசியலை அரசியலால் எதிர்கொள்ளுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். உண்மைக்கு உண்மையால் பதிலளியுங்கள். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மட்டும் காயப்படுத்தாதீர்கள்.' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, 'Troll-கள் எத்தனை வந்தாலும், நாங்கள் பெண்கள் அசைந்து போக மாட்டோம். அஞ்ச மாட்டோம். அமைதியாக பின்வாங்க மாட்டோம். உறுதியுடன் நிற்போம். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்…' என்ற உறுதிப்பாட்டை பெண் தலைவர்கள் பெற வேண்டும் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பெண் அரசியல்வாதிகளை தனிப்பட்ட முறையில் தாக்கும் Troll-களுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version