MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விசிக – திமுக வார்த்தைப் போர்: அமைச்சர் பதில் – ஸ்டாலின் அறிவுரை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விசிக – திமுக வார்த்தைப் போர்: அமைச்சர் பதில் – ஸ்டாலின் அறிவுரை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - விசிக – திமுக வார்த்தைப் போர்: அமைச்சர் பதில் – ஸ்டாலின் அறிவுரை!

அரசியல்

விசிக – திமுக வார்த்தைப் போர்: அமைச்சர் பதில் – ஸ்டாலின் அறிவுரை!

Admin
Last updated: மே 23, 2026 6:08 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சார்பில் ஷாஜகானுக்கு வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து விலகி, முதல்வர் விஜய்யின் தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. அதேபோல், திமுக கூட்டணியில் இருந்த விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் பங்கேற்றன. தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த திமுக, கூட்டணியும் உடைந்ததால் கடும் அதிருப்தியில் உள்ளது.

இந்த சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. அவர் பதிவிட்ட கருத்துக்கள் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளையும், பெண்களையும் இழிவுபடுத்துவதாக எழுந்த எதிர்ப்பால், அவர் அந்த பதிவை நீக்கினார். பின்னர், 'என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் “முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?' என மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, 'அதிகாரம் எளியவர்க்கு – அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து – அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்' என பதிவிட்டுள்ளார். முன்னதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன, எவன் போனால் என்ன. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை' என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'ஒரு கட்சியையோ, ஒரு தலைவரையோ பெண்ணின் உறவுடன் தொடர்புபடுத்திப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவிடம் இன்று கடமையும் இல்லை, கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. இந்த 3 கோட்பாடையும் மறந்துவிட்டார்கள். இதற்கு திமுக தலைவரின் கருத்து என்ன?' என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், 'தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே திமுகவினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu PoliticsVCKதமிழக அரசியல்திமுகமுதல்வர் விஜய்விசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அனிருத் காதல் திருமணம்? ஸ்பெயினில் நவம்பரில் நிச்சயதார்த்தமா?
Next Article 8000 தனியார் மருத்துவமனைகள்: தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரம் குறித்து விவாதிக்க உள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை எதிரொலி: 'இந்தியா' கூட்டணி அடுத்த…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த…

செப்டம்பர் 26, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார்: 6 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து, 5 பேர் காயம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அடுத்தடுத்து…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஸ்டாலின் கேள்வி: முதலமைச்சர் எப்போது Silent Mode-ல் இருந்து வெளியே வருவார்?

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் எப்போது 'silent mode'-ல் இருந்து வெளியே வருவார் என கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் நலன் குறித்து…

1 Min Read
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகக் கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

திமுகவில் அதிரடி மாற்றம்: மாநகரச் செயலாளர் பதவி ரத்து!

திமுகவில் நீண்டகாலமாக இருந்து வந்த 'மாநகரச் செயலாளர்' பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்தவும், களப்பணியை வேகப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
கனிமொழி தமிழ்நாடு மாநில உரிமைகள் குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

தமிழ்நாடு தனித்துவத்தை உயர்த்திப் பிடிப்போம் – கனிமொழி

பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டிய நாளில், மாநில உரிமைகளைக் காக்க உறுதியேற்போம் என கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார். நமது தனித்துவத்தை உயர்த்திப் பிடிப்போம்.

1 Min Read
தமிழ்நாடு

கடந்த ஆட்சி ஊழல்கள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!

கடந்த ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?