தமிழகத்தில் 48 சப்-கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மண்டல/மாவட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் பணியாற்றி வந்த பெரும்பாலான சப்-கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மண்டல, மாவட்ட மேலாளர்கள் என மொத்தம் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் குறித்த ஆணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருவள்ளூர் கிழக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த ரேணுகா, நில எடுப்பு துறை தகுதி வாய்ப்பு அதிகாரி திருவள்ளூராகவும், தஞ்சாவூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த தமிழ்மணி, ஆர்.டி.ஓ. திருச்சி ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், நீலகிரி டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த தீப சித்ரா, தனித் துறை ஆட்சியர் நீலகிரியாகவும், பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த முத்துகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் மயிலாடுதுறையாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த ஜோதி சங்கர், துணை தாசில்தார் நில எடுப்பு விழுப்புரம் ஆகவும், கோவை டாஸ்மாக் பொது மேலாளராக இருந்த சீனிவாசன், மாவட்ட வளங்கள் நுகர்வோர் பாதுகாப்புத் துறையாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சிவகங்கை டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த சுரேஷ் கண்ணன், தனித் துறை ஆட்சியர் மதுரையாகவும், சென்னை தெற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த பிரபு வெங்கடேசன், மாவட்ட ஆத திராவிட மற்றும் பழங்குடி நல வாரிய மயிலாடுதுறையாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை வடக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த ரமேஷ், மண்டல மேலாளர் சிவில் சப்ளை சேலம் ஆகவும், சிறப்பு பறக்கும் படை துணை ஆட்சியர் சென்னை ஆனந்தி, தனித்துறை ஆட்சியர் நெல்லையாகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருந்த ராஜகோபால், தனித்துறை ஆட்சியர் கரூர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர மேலும் பலர் இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.