பன்றிக்காய்ச்சல் 399 ஆக உயர்வு: சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு 19-லிருந்து 399 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார். டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். டெங்கு பாதிப்பு, கழிவுநீரிலிருந்து பரவாமல், சுத்தமான தண்ணீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகும். மேலும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள்தான் இந்த நோயைப் பரப்பும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, வாந்தி, தீராத உடல்வலி போன்ற டெங்கு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். டெங்குவைப் போலவே பன்றிக்காய்ச்சலுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்றும் அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதம் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது. எனவே, லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் உயர்வு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version