MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வங்கதேச வீரர்களை வம்பிழுத்த ஸ்டீவ் ஸ்மித்: அம்பயர்கள் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வங்கதேச வீரர்களை வம்பிழுத்த ஸ்டீவ் ஸ்மித்: அம்பயர்கள் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - வங்கதேச வீரர்களை வம்பிழுத்த ஸ்டீவ் ஸ்மித்: அம்பயர்கள் எச்சரிக்கை

விளையாட்டு

வங்கதேச வீரர்களை வம்பிழுத்த ஸ்டீவ் ஸ்மித்: அம்பயர்கள் எச்சரிக்கை

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 22, 2026 5:24 மணி
Sri Prem Kumar R
Share
ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம்
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்
SHARE

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் வங்கதேச வீரர்களை வம்பிழுத்த சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அம்பயர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை எச்சரித்தனர்.

மெக்காய் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது 9 வது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது வீசிய பந்து ஸ்டீவ் ஸ்மித்தின் பேடில் பட்டது. இதற்கு வங்கதேச வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டு அப்பீல் செய்தனர். ஆனால் கள அம்பயர் நிதின் மேனன் அதை அவுட் இல்லை என்று மறுத்துவிட்டார்.

இதனால் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது ஆகியோர் டிஆர்எஸ் ரிவ்யூ எடுப்பது குறித்து மைதானத்தில் தீவிரமாக ஆலோசித்து வந்தனர். அப்போது குறுக்கிட்ட ஸ்டீவ் ஸ்மித், வங்கதேச வீரர்களை நோக்கி கேலி செய்யும் வகையில் பேசத் தொடங்கினார்.

'நான் ஆடுகளத்தின் பாதியைக் கடந்து வந்து விளையாடியுள்ளேன். பந்து விக்கெட்டுக்கு மேலே தான் செல்லும். முடிந்தால் ரிவியூ எடுத்துப் பாருங்கள்' என்று சைகை செய்து சவால் விட்டார். ஸ்மித்தின் இந்த சீண்டலால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதை அடுத்து இரண்டு அம்பயர்களும் உடனடியாக ஸ்மித்தை அணுகி, அவரது நடத்தைக்காகக் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இதே போன்ற ஒரு சர்ச்சை அரங்கேறியது. சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் வீசிய பந்தை ஸ்மித் லெக் திசையில் தட்டிவிட்ட போது, அது பேட்டில் பட்டதாக வங்கதேசம் வீரர்கள் கருதினர். அப்போதும் ஸ்மித், 'ரிவியூவை பயன்படுத்துங்கள்… மற்றொரு ரிவியூவையும் வீணாக்குங்கள்… உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்' என்று வங்கதேச வீரர்களை நோக்கி வம்பிழுத்தார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போது லிட்டன் தாஸுடன் ஸ்மித் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. வங்கதேச வீரர்களைத் தொடர்ந்து வம்பிழுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், இந்தப் போட்டியில் 42 ரன்கள் எடுத்திருந்த போது ஷோரிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா 165க்கு 8 விக்கெட் காலி.. பவுலிங்கில் கலக்கிய வங்கதேச வீரர் ஷோரிபுல் இஸ்லாம் என்ற செய்தியும் வெளியானது.

ஸ்டீவ் ஸ்மித்தின் இந்தச் சர்ச்சைக்குரிய செயல்பாடு குறித்து வர்ணனையாளர் கெர்ரி ஓகீஃப் பேசுகையில், '1970 களில் யாராவது இதுபோல் செய்திருந்தால் மைதானத்திலேயே பெரிய அளவில் கைகலப்பு வெடித்திருக்கும்' என்று கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் மீது ஐசிசி நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AustraliaBangladeshSteve SmithTest CricketUmpiresஅம்பயர்கள்ஆஸ்திரேலியாடெஸ்ட் கிரிக்கெட்வங்கதேசம்ஸ்டீவ் ஸ்மித்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சௌகார் ஜானகி உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி சௌகார் ஜானகி மறைவு: அரசு சார்பில் அஞ்சலி
Next Article மகாவீர் கர்ணா திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு மகாவீர் கர்ணா: டிசம்பர் 4ல் வெளியாகும் புதிய திரைப்படம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

விளையாட்டு

விஜய் சங்கர் ஓய்வு: ‘3டி வீரர்’ கண்ணீருடன் விடைபெறுகிறார்!

இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு '3டி வீரர்' முற்றுப்புள்ளி.

2 Min Read
இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா கேட்ச் பிடிக்கும் காட்சி
விளையாட்டு

இந்தியா vs இலங்கை: தடுமாறி கேட்ச் பிடித்த டிக்வெல்லா.. பாதியில் தப்பிய கில்

இந்தியா vs இலங்கை டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சுப்மன் கில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தடுமாறி கேட்ச் பிடித்தார். படிக்கல் சதம்…

3 Min Read
விளையாட்டு

சென்னை vs லக்னோ: பிளே-ஆஃப் கனவை தக்கவைக்குமா சிஎஸ்கே?

ஐபிஎல் தொடரில் இன்று லக்னோவை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ், பிளே-ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்த முனைப்பு காட்டும். லக்னோ அணி ஆறுதல் வெற்றியுடன் கடைசி இடத்தை தவிர்க்க…

2 Min Read
துலீப் கோப்பை அரையிறுதியில் சதம் அடித்த திலக் வர்மா
விளையாட்டு

துலீப் கோப்பையில் சதம் அடித்த 23 வயது MI வீரர் திலக் வர்மா!

துலீப் டிராபி அரையிறுதியில், 23 வயதான MI வீரர் திலக் வர்மா சதம் அடித்து தெற்கு மண்டல அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார். 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?