உலகம் பீட்டர் பார்க்கரை மறந்த நிலையில், 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்பைடர் மேன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த புதிய படத்தின் டிரெய்லர் வெளியானது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிஸா காலோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஸ்பைடர் மேன் வரிசையில் வெளியான முதல் பாகமான ‘ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்' படத்தில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, 'ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹேம்' மற்றும் இறுதியாக 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. இந்த மூன்று திரைப்படங்களையும் ஜான் வாட்ஸ் சிறப்பாக இயக்கி இருந்தார்.
இந்நிலையில், இந்த வரிசையில் 4-வது பாகமாக 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார். இந்தப் படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லரில், ஹல்க் மற்றும் ஸ்பைடர் மேன் இடையேயான விறுவிறுப்பான மோதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது, இந்தப் படம் அதிரடி சண்டைக் காட்சிகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் நிறைந்த ஒரு மார்வெல் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ஸ்பைடர் மேன் தொடரின் புதிய அத்தியாயமாக உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், படத்தின் ஆக்ஷன் மற்றும் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.

