MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சீர்காழியில் வைகாசி மாத சிறப்பு கோபூஜை: பக்தர்கள் பரவசம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - ஆன்மிகம் - சீர்காழியில் வைகாசி மாத சிறப்பு கோபூஜை: பக்தர்கள் பரவசம்!

ஆன்மிகம்

சீர்காழியில் வைகாசி மாத சிறப்பு கோபூஜை: பக்தர்கள் பரவசம்!

Admin
Last updated: மே 15, 2026 1:54 மணி
Admin
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற சட்டைநாதர் சுவாமி கோவிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.

இந்த ஆலயத்தில், வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பான கோபூஜை வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மாசிலாமணி நிலையத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் பங்கேற்று, பசுக்களுக்கு வழிபாடு நடத்தினார்.

கோபூஜையைத் தொடர்ந்து, கொடிமரத்து விநாயகர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கோசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட பசு மாடு மற்றும் கன்றுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பசுக்களுக்கு வாழைப்பழங்கள் மற்றும் அகத்திக்கீரைகளை வழங்கி வலம் வந்து வணங்கினர்.

மேலும், பிரம்மபுரீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் உள்ள காட்சி கொடுத்த நாயகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் தேவாரப் பாடல்களைப் பாடி, இறைவனை தரிசித்து மனமுருக வழிபாடு செய்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Hindu PoojaTamil Nadu Templesகோபூஜைசீர்காழிவைகாசி மாதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்.30 வரை தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Next Article வெள்ளியங்கிரி மலை: அடுத்த ஆண்டு முதல் மருத்துவ சான்றுடன் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

ஆன்மிகம்

கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய திருவிழா: தேர் பவனி ஜூலை 6ல்

நாகை மாவட்டம் கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா தொடங்கியது. தேர் பவனி ஜூலை 6 அன்று நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

1 Min Read
ஆன்மிகம்

திருப்பதியில் 18 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் தரிசனம் தீவிரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் 91,020 பக்தர்கள் தரிசனம் செய்தனர், இதில் இலவச தரிசனத்திற்கு…

1 Min Read
ஆன்மிகம்

வைகாசி முதல் நாள்: செல்வ வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்!

நாளை வைகாசி முதல் நாள்! பெருமாளுக்கு உகந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து செல்வ வளமும், பித்ரு தோஷ நிவர்த்தியும் பெறுங்கள்.

2 Min Read
ஆன்மிகம்

மே 16: சர்வ அமாவாசை, முக்கிய நிகழ்வுகள் – இன்றைய ராசிபலன்

மே 16, சனிக்கிழமை சர்வ அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ராசிபலன்கள்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?