MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தல்: சீமான் வரவேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தல்: சீமான் வரவேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தல்: சீமான் வரவேற்பு

தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தல்: சீமான் வரவேற்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 10, 2026 7:53 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு மொழியே ஒரு தேசமாகவும், அந்த மொழியை அடிப்படையாகக் கொண்ட மக்கள் கூட்டமே ஒரு தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் என அனைத்தும் மொழியிலிருந்தே பிறக்கின்றன. அதனால்தான் மொழியைத் தாயாகப் போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில், தமிழை முதன்மைப்படுத்த வேண்டியது இங்கு ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும்.

வேறுபட்ட மொழி, பண்பாடு, வாழ்வியல் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒரே நாட்டுக்குள் வாழ்வதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டின் பன்மைத்துவம் போற்றப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட அதிக மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதாகும்.

மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து, ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே இராணுவத்தளபதி, ஒரே உணவுச்சந்தை என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை வலிந்து திணிப்பதும், தேசிய இனங்களின் மொழியைப் போற்றும் பாடலை பின்னுக்குத் தள்ளுவதுமான போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப் பாடலாகப் பாடப்பட வேண்டும் என்ற தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்களுக்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Naam Tamilar KatchiSeemanTamil Nadu AssemblyTamil Thai Vazhthuசீமான்தமிழக சட்டமன்றம்தமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பாரதியார் கோட் சூட் அணிந்தே தமிழ் பணி செய்தார்: அமைச்சர் ராஜ்மோகன்
Next Article விராட் கோலி பந்துவீசும் காட்சி விராட் கோலியின் பந்துவீச்சு: முன்னாள் ஆர்சிபி வீரரின் கிண்டல் பேச்சு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வர் விஜய் இன்று காலை சட்டமன்றத்தில் முதல் உரை ஆற்றிய நிலையில், சாலைகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

முதல்வர் பாதுகாப்பு காவலர்களுக்கு வாந்தி, மயக்கம்: பிரியாணியில் பல்லி?

சென்னை ஈசிஆர் சாலையில் முதலமைச்சர் விஜய் பாதுகாப்பு பணியில் இருந்த 11 காவலர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் பல்லி இருந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

2 Min Read
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அமைச்சர் செ. கமலியால்
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலியால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும்.

1 Min Read
தமிழ்நாடு

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?