MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்த சீமான்: அரசுப் பள்ளிகள் குறித்து கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்த சீமான்: அரசுப் பள்ளிகள் குறித்து கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்த சீமான்: அரசுப் பள்ளிகள் குறித்து கேள்வி

தமிழ்நாடு

அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்த சீமான்: அரசுப் பள்ளிகள் குறித்து கேள்வி

Admin
Last updated: ஜூலை 6, 2026 5:31 மணி
Admin
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சர் ராஜ்மோகனா அல்லது அரசுப் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார். தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத் தவறுவது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாபக் கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குதான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா?

உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர், எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன.

தனியார் பள்ளிகள் குறித்து தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன், அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்? தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் பணி உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தனியார் பள்ளிகள் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா?

தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது – கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா என்ற ஐயத்தை எழுப்புகிறது.

ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது தான் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Nadu Politicsஅரசுப் பள்ளிகள்சீமான்தனியார் பள்ளிகள்நாம் தமிழர் கட்சிபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ராஜ்மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நிசான் டெக்டான் காரின் முன்பக்கத் தோற்றம் நிசான் டெக்டான் அறிமுகம்: க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக வரும் ‘பேபி பேட்ரோல்’
Next Article அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினத்தில் ஆசிரியையால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்த செய்தி

வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன்: ஆசிரியையால் அடித்ததில் பரிதாப மரணம்

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன், ஆசிரியையால் தாக்கப்பட்டதில் வகுப்பறையிலேயே உயிரிழந்த…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

நீர்வளத்துறை தலைமை பொறியாளர் டி. தமிழ்செல்வி
தமிழ்நாடு

கொடியேற்ற மறுத்த நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தமிழ்செல்வி!

தரமணி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் டி. தமிழ்செல்வி, பொறுப்பேற்ற நாள் முதல் தேசிய கொடியை ஏற்ற மறுத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சொந்த வேலை இருப்பதாகக் கூறி…

2 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

தனுஷ் படுகொலை: அரசு மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

திருவொற்றியூரில் மாணவர் தனுஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு மீது உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்ட மாணவர் கொலை செய்யப்பட்டதைச்…

2 Min Read
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

கைது குறித்து உதயநிதி ஸ்டாலின்: அரசு இலவச ரோடு ஷோ நடத்தியதா?

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது கைது குறித்து பேசியபோது, அரசு செலவில் இலவச ரோடு ஷோ நடத்தப்பட்டதால் கைது செய்யப்பட்டதாக நினைத்ததாக நகைச்சுவையாகக் கூறினார்.

2 Min Read
தமிழ்நாடு

வீட்டில் கஞ்சா வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: பரபரப்பு!

சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு இலக்குக்கு எதிராக இத்தகைய சம்பவங்கள் நடப்பது விமர்சனங்களை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?