MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்தால் கடும் விளைவு: சீமான் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்தால் கடும் விளைவு: சீமான் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்தால் கடும் விளைவு: சீமான் எச்சரிக்கை

தமிழ்நாடு

முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்தால் கடும் விளைவு: சீமான் எச்சரிக்கை

Admin
Last updated: ஜூலை 5, 2026 2:31 மணி
Admin
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

தமிழர் இறையோனாம் முருகப்பெருமானை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரிக்கும் வகையில் ஆந்திராவில் தயாராகும் ஜூனியர் என்.டி.ஆர். படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும், வரலாறு திரித்து சித்தரிக்கப்பட்டால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'என்.டி.ஆர்-திரிவிக்ரம்' என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், தமிழர் இறையோன் முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதன் அடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது.

அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள்.

கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள். இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.

முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு.

மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன். வணிகத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன். தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ்ப்பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ, தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Jr NTRMuruganNaam Tamilar KatchiNorth IndiaSeemanTamil GodTrivikramசீமான்தமிழ் கடவுள்திரிவிக்ரம்நாம் தமிழர் கட்சிமுருகன்வட இந்தியாஜூனியர் என்.டி.ஆர்.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாருதி சுசுகி நெக்ஸா கார்கள் காட்சி மாருதி சுசுகி கார்களுக்கு ஜூலை மாத சிறப்பு தள்ளுபடி!
Next Article கீவே ஹைப்வோல்ட் ஆர் மின்சார ஸ்கூட்டர் ரூ.5 ஆயிரத்தில் 180 கிமீ ரேஞ்ச்: Keeway Hypevolt R மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை!

இயக்குநர் கே. பாக்யராஜின் இறுதிப் பயணத்திற்கு தமிழக அரசு முழு அரசு மரியாதை செலுத்தும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த…

1 Min Read
சிறப்பு ரயில் இயக்கத்தை குறிக்கும் ரயில்வே அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் மற்றும் தாம்பரம் இடையே திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
எடப்பாடி பழனிசாமி விஜயகாந்த் நினைவு தினத்தில் புகழஞ்சலி செலுத்துகிறார்
தமிழ்நாடு

விஜயகாந்த் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 'கேப்டன்' என்ற பெயர் காலத்தை கடந்து…

1 Min Read
தமிழக சட்டமன்றம்
தமிழ்நாடு

21 நாள் சட்டசபை நிறைவு: 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையின் 21 நாட்கள் நடைபெற்ற முக்கிய கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்தது. இந்த கூட்டத் தொடரின் போது, மொத்தம் 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?