MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு சீமான் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு சீமான் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு சீமான் கண்டனம்

தமிழ்நாடு

விஜய் சேதுபதி கருத்து: தவெகவினருக்கு சீமான் கண்டனம்

Fernandez
Last updated: செப்டம்பர் 15, 2026 6:24 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில், போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துக்களை, முதலமைச்சர் விஜய்க்கு எதிரானதாகத் திரித்து, தவெகவினர் அவரை கடுமையாக விமர்சிப்பதும், இழிவுபடுத்துவதும் கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிக்பாஸ் நிகழ்ச்சியில், விளையாட்டுச் சூழலை முன்வைத்து விஜய் சேதுபதி கூறிய கருத்துக்களை, முதலமைச்சர் விஜய்க்கு எதிரானதாகப் பொருள் கொண்டு, தவெகவினர் அவரை கடுமையாக விமர்சித்தும், இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது. தம்பி விஜய் சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?"

"மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?" என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.

அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு. எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! 'ஜனநாயகன்' என்று படம் எடுத்தால் மட்டும் போதாது… உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!” என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bigg BossChief Minister VijayNaam Tamilar KatchiSeemanTVKVijay Sethupathiசீமான்தவெகநாம் தமிழர் கட்சிபிக்பாஸ்முதலமைச்சர் விஜய்விஜய் சேதுபதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் காட்சி இந்தியா – நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த மாதம் முதல் அமல்
Next Article கல்வி உதவித்தொகை உயர்வு குறித்த அறிவிப்பு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி உதவித்தொகை உயர்வு: SC/ST மாணவர்கள் மகிழ்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஜூனியர் இன்ஜினியர் பணிக்கான அறிவிப்பு
தமிழ்நாடு

ரயில்வேயில் 3,993 ஜூனியர் இன்ஜினியர் வேலைகள்: உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர், DMS, CMA உள்ளிட்ட 3,993 பணியிடங்களுக்கு டிப்ளமோ/டிகிரி தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹35,400. விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2026.

3 Min Read
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் பேசுகிறார்
தமிழ்நாடு

ஆதவ் அர்ஜுனா பதவி விலக நேரிடும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஆதவ் அர்ஜுனா பதவி விலக நேரிடும் என்றும், முதலமைச்சர்…

3 Min Read
மத்திய அரசு விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உண்டா? மத்திய அரசு விளக்கம்!

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தனிநபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் இலவசம், ஆனால் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு குறைந்த கட்டணம் வரலாம்.

2 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: கர்நாடகா செல்ல வேண்டாம் – அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது அதிர்ச்சியளிப்பதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?