MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பல்கலைக்கழக சட்டம்: சீமான் கடும் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பல்கலைக்கழக சட்டம்: சீமான் கடும் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பல்கலைக்கழக சட்டம்: சீமான் கடும் கண்டனம்

தமிழ்நாடு

தனியார் பல்கலைக்கழக சட்டம்: சீமான் கடும் கண்டனம்

Fernandez
Last updated: செப்டம்பர் 14, 2026 10:36 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

தமிழ்நாட்டின் உயர்கல்வியை வணிகமயமாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டின் உயர்கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் அவசர அவசரமாக தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தவெக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, புதிய தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 100 ஏக்கர் நிலமும், ரூ.50 கோடி நிரந்தர வைப்புத்தொகையும் தேவைப்பட்டது. ஆனால், தற்போதைய திருத்தச்சட்டத்தின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கர், ஊரகப் பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் போதுமானது. மேலும், நிரந்தர வைப்புத்தொகையும் ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்திருத்தம், தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழிவகுக்கும் என்றும், இது கடந்த 2008 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவர முயன்று, கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட சட்ட வரைவுக்கு ஒப்பானது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய தவெக அரசு, முந்தைய திமுக அரசால் கைவிடப்பட்ட இந்தத் திருத்தச்சட்டத்தை 'தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட வரைவு – 2026' என்ற பெயரில் வேகவேகமாக நிறைவேற்றியுள்ளது. இது தமிழ்நாட்டு ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் கொடுஞ்செயல் என்று சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் இப்படியொரு சட்டத்திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? யாருடைய உத்தரவின் பேரில், யாருடைய இலாபத்திற்கு இது நிறைவேற்றப்பட்டது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் திருத்தச்சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஏறத்தாழ 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறும் வாய்ப்புள்ளது. அவ்வாறு மாறினால், சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. மேலும், ஏழை மாணவர்களுக்கான கட்டண சலுகையும் இருக்காது. நன்கொடை என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளும் சூழல் உருவாகும். இதனால் கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவு கானல் நீராகும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், 100 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் பல்கலைக்கழகங்களாக மாறினால், அரசு ஒதுக்கீட்டிற்கு 50 முதல் 65 விழுக்காடு இடங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவாகும். கல்வி கட்டணம், பாடத்திட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரைத் தனியார் பல்கலைக்கழகங்களை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணிப் பாதுகாப்பை இழக்கும் ஆபத்தும் உள்ளது. ஏற்கனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் 5000க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்குப் பணி மேம்பாடு வழங்கப்படாத நிலையில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஊழியர்களுக்கான சட்டப்படியான பணிப்பாதுகாப்பும், சலுகைகளும் மறுக்கப்படும் என்றும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டிலுள்ள தனியார் சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தற்போதைய விதிமுறை தளர்வுகளைப் பயன்படுத்தித் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறினால், அவை மாணவர்களுக்கான கல்விச் சேவை என்பதிலிருந்து தடம்மாறி, முழுக்க முழுக்க இலாபமீட்டும் வணிக நிறுவனங்களாகவே மாறிவிடும். இதனால் உயர்கல்வியின் தரம் குறைந்து, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையும் உருவாகிவிடும்.

இந்தச் சட்டத்திருத்தம் மூலம், ஆட்சிப்பொறுப்பேற்ற 100 நாட்களில் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை தவெக அரசு சிதைத்துள்ளதுதான் அதன் மிகப்பெரிய சாதனையாகும். நாட்டின் எதிர்காலத் தலைமுறையினருக்கு அடிப்படையாக வழங்க வேண்டிய கல்வியைக் கூட வழங்க முடியாமல் தனியாருக்கு தாரைவார்ப்பதுதான் மக்களுக்கான ஆட்சியா? ஒரு புறம் சமூக நீதி அரசு என்று பெருமை பேசிக்கொண்டு, மறுபுறம் இது போன்ற கொடும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீடு முறையை ஒழித்து, ஏழை எளிய மாணவர்களை வஞ்சிப்பதுதான் தூயசக்தியா? அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கி, விதிமுறைகளை தளர்த்தி, தனியார் முதலாளிகள் இலாபமீட்ட வழிவகுப்பதுதான் ஊழல், இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? வெட்கக்கேடு! என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகவே, தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பைச் சிதைத்து, ஏழை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பைப் பறித்து, கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் – 2026ஐ தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:higher educationNaam Tamilar KatchiPrivate University ActReservationSeemanஇட ஒதுக்கீடுஉயர்கல்விசீமான்தமிழ்நாடுதனியார் பல்கலைக்கழக சட்டம்நாம் தமிழர் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலப் பிரச்சினை தொடர்பாக மோதலில் ஈடுபட்ட கிராம மக்கள் தூத்துக்குடி நிலத்தகராறு: இரு கிராம மக்கள் மோதல்; 40 பேர் மீது வழக்கு
Next Article முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் ஆசிய கோப்பை: பாகிஸ்தானுடன் இனி இந்தியா ஆடக்கூடாது – மதன் லால் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

ராசிபலன் கணிப்பு
தமிழ்நாடு

இன்று ராசிபலன்: குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்!

ஆகஸ்ட் 12, 2026 இன்றைய ராசிபலன்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அனைத்து ராசிக்கான பலன்கள் இதோ.

4 Min Read
லைஃப் ஸ்டைல்

ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் விஜய்!

தமிழக முதல்வர் விஜய், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக உரையாடினார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது இந்த…

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மூடல் மர்மம்: அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழகத்தில் மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகள் குறித்த மர்மங்கள் நீடிப்பதாகவும், இது தொடர்பாக அரசு ஏன் வெள்ளையறிக்கை வெளியிடத் தயங்குகிறது என்றும் பாஜக மாநில தலைவர்…

2 Min Read
தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு திரும்பப் பெற நாளை மறுநாள் கடைசி நாள்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?