MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வீடியோ ஆதாரம் இருந்தும் ஜெம் வீரமணி கைது செய்யப்படாதது வெட்கக்கேடு – சீமான்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வீடியோ ஆதாரம் இருந்தும் ஜெம் வீரமணி கைது செய்யப்படாதது வெட்கக்கேடு – சீமான்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வீடியோ ஆதாரம் இருந்தும் ஜெம் வீரமணி கைது செய்யப்படாதது வெட்கக்கேடு – சீமான்

தமிழ்நாடு

வீடியோ ஆதாரம் இருந்தும் ஜெம் வீரமணி கைது செய்யப்படாதது வெட்கக்கேடு – சீமான்

Fernandez
Last updated: செப்டம்பர் 23, 2026 5:29 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிடுகிறார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன; பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.

முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும், வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டது கடும் கண்டனத்திற்குரியது. போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கண்டனத்திற்குரியது. பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது.

மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும்.

இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன. குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது. ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும். திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும். ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.

இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும். ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும், இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்", எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சீமான்தமிழ்நாடுதவெக அரசுநாம் தமிழர் கட்சிபாலியல் குற்றங்கள்பெண்கள் பாதுகாப்புமரண தண்டனைஜெம் வீரமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த செய்தி கலை-அறிவியல் கல்லூரிகளில் 1.4 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன
Next Article ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் ஜிப்மர் வேலைவாய்ப்பு: பட்டப்படிப்பு தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பல்தேவ்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை: இன்ஸ்பெக்டர் கைது, 3 கிலோ கொகேன் பறிமுதல்

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் பல்தேவ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து…

செப்டம்பர் 26, 2026

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் கொலை மிரட்டல்: இளைஞர் கைது

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை…

செப்டம்பர் 26, 2026

குழந்தைகளுக்கு பாம்பு காட்டியவர் சோகம்: கட்டு விரியன் பாம்பால் நேர்ந்த விபரீதம்

கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்த பாம்பு…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையம்: எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையம், பிஹார் உட்பட 30…

செப்டம்பர் 26, 2026

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ்,…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

அதிமுகவை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்!

இரட்டை இலை சின்னத்தை வைத்திருந்தும் டெபாசிட் இழக்கும் அதிமுக நிலைமைக்கு பொருத்தமானது என காங்கிரஸ் எம்.எல்.ஏ மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பாமக, வன்னியர் சங்கம் அன்புமணியிடம் ஒப்படைப்பு – ராமதாஸ் அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை சந்தித்து, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார். ராமதாஸ் உடல் நலனில் கவனம் செலுத்த…

1 Min Read
தமிழ்நாடு

பெங்களூரு-ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக, பெங்களூரு மற்றும் ஆந்திரா இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இரு மாநில பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

1 Min Read
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு குறித்த செய்தியை காட்டும் புகைப்படம்
தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உச்சம்: சவரன் ₹1,13,240-க்கு விற்பனை

தங்கம் விலை இன்று மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ₹1,13,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ₹14,155 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?